"ஒடிஸாவின் மோடி" பிரதாப் சந்திர சாரங்கி அமைச்சரவையிலிருந்து நீக்கம்!
டெல்லி: ஒடிஸாவின் மோடி என அழைக்கப்பட்ட பிரதாப் சந்திர சாரங்கி தற்போது அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சரவையில் இரு ஆண்டுகள் கழித்து விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. இதில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க மோடி முடிவு செய்துள்ளார்.
அதன்படி ஒவ்வொரு அமைச்சராக நீக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஒடிஸாவின் பாலசோர் எம்பி பிரதாப் சந்திர சாரங்கி நீக்கப்பட்டுள்ளார்.

எத்தனை பேர்
இதையடுத்து இவர் ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடியை தொடர்ந்து மொத்தம் 57 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களில் 24 பேர் கேபினட் அமைச்சர்கள், 24 பேர் இணை அமைச்சர்கள், 9 பேர் தனி பொறுப்புடன் கொண்டவர்கள் ஆவர்.

ஒடிஸா எம்பி
இந்த பட்டியலில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஒடிஸா எம்பி பிரதாப் சந்திர சாரங்கி. எளியவராக அறியப்படும் இவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவியை மோடி கொடுத்தார். அதாவது கால்நடைத் துறை, மீன்வளம் மற்றும் சிறு குறு நிறுவனங்களின் இணையமைச்சர் பதவியை வகித்து வந்தார்.

ஜோல்னா பை
மண் சுவர் கொண்ட ஒரு குடிசை, ஒரு ஜோல்னா பை, துருப்பிடித்த சைக்கிள்- இவைதான் சாரங்கிக்கி சொந்தம். ஒடிஸாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு எம்பி இவர். பாலசோர் தொகுதியில் போட்டியிட்ட சாரங்கிக்கு எதிராக முதல்வர் நவீன் பட்நாயக் பிரச்சாரம் செய்தும் ஒன்றும் ஆகவில்லை.

சாரங்கி
பாலசோரில் சாரங்கியை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். அத்தனை பணக்கார வேட்பாளர்களை தோற்கடித்து கெத்தாக வென்றார் சாரங்கி. இவரது வெற்றிக்கு பரிசாக மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தற்போது விரிவாக்கத்திற்காக பறிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications