குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு நெஞ்சு வலி... மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை லேசான நெஞ்சுவலி காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குடியரசுத் தலைவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 President Ram Nath Kovind complains of chest discomfort, undergoes checkup

இதுகுறித்து ராணுவ மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "குடியரசுத் தலைவர் இன்று காலை லேசான நெஞ்சுவலி இருப்பதாகக் கூறி ராணுவ மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் நடத்தப்பட்டு, தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் "குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல்நிலை குறித்து அவரின் மகனிடம் தொடர்புகொண்டு பிரதமர் மோடி கேட்டறிந்தார். ராம்நாத் கோவிந்தின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்து, அவர் விரைவாகக் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் மோடி தெரிவித்தார்" என்று கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+