என்.டி.ராமாராவ் நூற்றாண்டு விழா..அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை வெளியிடுகிறார் குடியரசு தலைவர்
டெல்லி: ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்தின் பிரபல நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமாராவ் நூற்றாண்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறார்.
கடந்த 1982ம் ஆண்டு என்.டி.ராமாராவ் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கியபோது காங்கிரஸ் இவரை எள்ளி நகையாடியது. ஏனெனில் அதுநாள் வரை ஆந்திரா என்றாலே காங்கிரஸ் கட்சிதான் என்று இருந்தது. இருப்பினும் புதிய கட்சியை தொடங்கிய என்.டி.ஆர் ஆந்திரா முழுவதும் அரசியல் சுற்று பயணம் மேற்கொண்டு வெறும் ஒன்பதே மாதங்களில் அம்மாநிலத்தில் ஆட்சியை பிடித்தார். அப்போதுதான் என்.டி.ஆரின் பவரை காங்கிரஸ் உணர்ந்தது.

ஆந்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை சேராத முதல் முதலமைச்சராக என்.டி.ஆர் உருவெடுத்தார். அதன் பின்னர் 1983ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டுவரை தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்தார். அவர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள் இப்போதும் அம்மாநில மக்களால் நெகிழ்ச்சியுடன் நினைவுகூரப்படுகிறது. இந்நிலையில் அவரது நூற்றாண்டு (1923-2023) தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை மேலும் சிறப்பாக்க அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று இந்த நாணயத்தை வெளியிடுகிறார். 44 மில்லி மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த நாணயம் 50 சதவீதம் வெள்ளியும், 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் துத்தநாகம், 5 சதவீதம் நிக்கல் கலவையால் உருவாக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் ஒரு புறத்தில் 3 சிங்கங்களுடன் அசோக சக்கரமும், மறுபுறத்தில் என்.டி.ஆர். ராமராவ் உருவம் பதித்து, அதன் கீழ் இந்தியில் நாதமுரி தாரக ராமராவ் சத்ஜெயந்தி 1923-2023 என அச்சிடப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று இந்த நாணயத்தை வெளியிடுகிறார். நாணய வெளியீட்டு விழாவில் என்.டி.ராமராவின் மகன்கள், மகள்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர். அதேபோல இந்த நாணய வெளியீட்டு விழாவை தெலுங்கு தேசம் கட்சியினரும் தங்களது மாநிலத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications