டெல்லி ராஜ்கோட்டில் காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!
டெல்லி: மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி முதல்வர் அதிஷி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.
காந்தியின் 156வது பிறந்த தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், டெல்லி முதல்வர் அதிஷி உள்ளிட்ட தலைவர்கள் பலர் மரியாதை செலுத்தி உள்ளனர்.

டெல்லி ராஜக்கோட் பகுதியில் உள்ள காந்தி நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அதிஷி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தியின் போது சிறப்புமிக்க திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்(2006), தூய்மை இந்தியா திட்டம் (2014), காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷன் சமிதி (1984), காந்தி ஷில்ப் பஜார், மகாத்மா காந்தி பங்கர் யோஜனா (2006), மகாத்மா காந்தி பிரவாசி சுரக்ஷா யோஜனா, காந்தி மெமோரியல் இன்டர்நேஷனல் பள்ளி, காந்தி அமைதி விருது (1960), காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷன் என பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
இதில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் இருக்கிறது. கிராமபுறங்களில் உள்ள ஏழை மக்கள் கைகளில் பணப்புழக்கத்தை ஏற்படுத்த இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ஆண்டில் குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலை என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இப்போது இந்த வேலை நாட்களும், இதற்கான ஊதியமும் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், மத்திய அரசு இதற்கு போதிய நிதியை வழங்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
இந்த காந்தி ஜெயந்தி தினத்திலாவது மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான நிதியை உயர்த்த வேண்டும், வேலை நாட்களையும், அவர்களுக்கான ஊதியத்தையும் மேலும் உயர்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications