ரெடியா இருங்க.. மோடி தரப்போகும் "தீபாவளி பரிசு".. ஆர்வத்தில் 75 ஆயிரம் பேர்.. தீயாய் பரவும் தகவல்
டெல்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 75 ஆயிரம் இளைஞர்களுக்கு பிரதமர் மோடி தீபாவளி பரிசு அளிக்க உள்ளார்.
இந்தியாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இந்தியா மட்டும் அல்லாது கடல் கடந்து வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களால் கூட இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வரும் திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார்.

75 ஆயிரம் இளைஞர்களுக்கு
அந்த வகையில் நடப்பு ஆண்டிலும் பிரதமர் மோடி எல்லையில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாட உள்ளார். தீபாவளி பண்டிகைக்கு முன்பாக பிரதமர் மோடி 75 ஆயிரம் இளைஞர்களுக்கு தனித்துவமான பரிசு ஒன்றை அளிக்கப் போகிறார். அதாவது வரும் சனிக்கிழமை நாடு முழுவதும் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பணிஆணையை வழங்க உள்ளதாகவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.

பல துறைகளில் இளைஞர்களுக்கான பணி
இளைஞர்களுடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கலந்துரையாடும் பிரதமர் மோடி , அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆர்டரையும் வழங்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பாதுகாப்பு அமைச்சகம், ரயில்வே துறை, தபால் துறை, உள்துறை அமைச்சகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், மத்திய தொழில்பாதுகாப்பு படை, சிபிஐ, சுங்கத்துறை, வங்கி என மத்திய அரசின் பல துறைகளில் இளைஞர்களுக்கான பணி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்
வரும் சனிக்கிழமை வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடைபெறும் இதற்கான நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒடிசாவில் இருந்தும், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா குஜராத்தில் இருந்தும், தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகூர் சண்டிகரில் இருந்தும், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்தும் பங்கேற்க உள்ளனர்.

காணொலி வாயிலாக..
இதேபோல், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தானில் இருந்தும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் இருந்தும், கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர பாண்டே உத்தர பிரதேச்த்தில் இருந்தும், பழங்குடியின நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா ஜார்க்கண்டில் இருந்தும், பஞ்சாயத் ராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பீகாரில் இருந்து இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்க உள்ளனர். அதேபோல் பாஜக எம்.பிக்கள் அனைவரும் தங்கள் பாராளுமன்ற தொகுதியில் இருந்து இந்த நிகழ்ச்சியில் இணைந்து கொள்கின்றனர்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
நாட்டில் வேலை வாய்ப்பு இன்மை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி அவ்வப்போது மத்தியில் ஆளும் பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் இந்த விவகாரத்தை முன்வைத்து மிகக்கடுமையாக சாடி வருகிறார்.

10 லட்சம் வேலை வாய்ப்புகள்
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் அறிவித்து இருந்தார். எனினும், பிரதமர் மோடி 8 ஆண்டுகளுக்கு முன்பாக 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவித்தாரே அதேபோலத்தான் இந்த வாக்குறுதியும் அமையும் என்று ராகுல் காந்தி விமர்சித்தார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications