அது ஒரு கொடிய மிருகம்! முதலையை பிடித்து வீட்டுக்கு கொண்டு வந்த மோடி! வகுப்பு பாடமாக வைத்த மெட்ரிக்!
டெல்லி : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தனது சிறு வயதில் குளத்தில் இருந்து முதலை குட்டியை பிடித்து வீட்டிற்கு கொண்டு சென்றதாக கூறிய நிலையில், அந்த சம்பவம் தற்போது ஒன்றாம் வகுப்பு மெட்ரிக் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
'இது ரொம்ப கொடுமையான மிருகம், அதுக்கிட்ட இருந்து எப்புடி தப்பிக்கிறதுனு நான் உங்களுக்கு சொல்றேன்.. இந்த மாதிரியான உயிர் பிழைக்க முடியாத சூழல்கள்ல எப்படி வாழனும்னு எனக்கு அமெரிக்க ராணுவத்துல பயிற்சி தரப்பட்ருக்கு'
எங்கோ கேட்ட மாதிரி இருக்கா..! கண்டிப்பாக கேட்டிருப்பீர்கள். 90'ஸ் கிட்ஸ்களின் சக்திமான் போன டிஸ்கவரி சேனலில் வரும் மேஸ் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் அடிக்கடி வரும் வசனங்கள் தான் இது.

மேன் Vs வைல்ட் நிகழ்ச்சி
டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற நிகழ்ச்சியான 'மேன் Vs வைல்ட்' சாகச நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் பியர் கிரில்ஸ். காடு, வன உயிரினங்களின் தன்மையை விளக்கும் பியர் கிரில்ஸ் காட்டுக்குள் சிக்கினால் உயிர் பிழைப்பது எப்படி என்பது குறித்து நிகழ்ச்சி மூலம் விளக்கம் அளிப்பார். அவர் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் ராணுவர் வீரர் என்பதும் குறிபிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி
உலகம் முழுவதும் புகழ்பெற்ற இந்த மேன் vs வைல்டு நிகழ்ச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு கலந்துகொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. அந்த நிகழ்ச்சி பல மொழிகளில் டப் செய்யப்பட்டு ஆகஸ்ட் 13 டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பபட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடி தன்னுடைய கடந்த காலம் குறித்து பகிர்ந்து கொண்டார். விலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த விழிப்புணர்வுக்காக பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக பியர் கிரில்ஸும் தெரிவித்தார்.

முதலையை பிடித்த பிரதமர்
உலக அளவில் அதிக ட்ரெண்டான இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியாக சாதனை படைத்ததாக பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்த பிரதமர் மோடி தன்னுடைய சிறு வயதில் முதலை குட்டியை பிடித்து வந்த கதையை சொன்னார். மேலும் அது பாவம் என தனது தாய் சொன்னதால் முதலையை குளத்திலேயே விட்டு விட்டதாகவும் கூறியிருந்தார். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ஆண்டுகள் பல கடந்து விட்ட நிலையில் பிரதமர் மோடி முதலையை பிடித்த கதை தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெட்ரிக் பாடத்திட்டம்
காரணம், பிரதமர் நரேந்திர மோடி அந்த நிகழ்ச்சியில் சொன்ன முதலையை பிடித்த கதை தற்போது ஒன்றாம் வகுப்பு மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த புத்தகத்தில் மொத்த இந்தியாவின் " மானிட்டர்" பிரதமர் நரேந்திர மோடி எனவும், அவர் சிறுவயதாக இருந்தபோது முதலை ஒன்றை தனது வீட்டுக்கு பிடித்து வந்ததாகவும், அந்த பாடப்புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் இடம்பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications