மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சி பதவியேற்ற வேகத்தில் பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மகாராஷ்டிரத்தில் முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னவீஸ் மற்றும் துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தில் நேற்று வரை காங்கிரஸ்- என்சிபி- சிவசேனா கூட்டணி அமைத்து அதில் உத்தவ் தாக்கரே முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்டது. சுழற்சி முறையில் முதல்வர் பதவி கேட்டு சமாதானம் அடைந்த பவார், உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய ஆட்சி மலரும் என நேற்றைய தினம் பேட்டி அளித்தார்.

Prime Minister Narendra Modi congratulated Fadnavis and Pawar

இந்த நிலையில் திடீர் திருப்பமாக பாஜக- என்சிபி கூட்டணி உருவானது. இதையடுத்து முதல்வராக தேவேந்திர பட்னவீஸும் துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வுகள் நடந்த சிறிது நேரத்திற்கெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறுகையில் மகாராஷ்டிரத்தில் முதல்வர் பட்னவீஸ், துணை முதல்வர் அஜித் பவாருக்கு வாழ்த்துக்கள். மகாராஷ்டிரத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு இருவரும் பாடுபடுவர் என நம்புகிறேன் என மோடி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+