தமிழ்நாட்டில் கூட காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.. சட்டென இழுத்த மோடி.. சரமாரி பேச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மணிப்பூர் விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இதற்கு பதிலளித்து உரையாற்றி வரும் பிரதமர் மோடி, "தமிழகத்தில் காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லை" என்று விமர்சித்துள்ளார்.

மணிப்பூரில் கடந்த மே மாதம் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவிய நிலையில், எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டை முன்வைத்தன. இதற்கிடையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதால் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டன.

Prime Minister Narendra Modi criticizes that there is no faith in Congress in Tamilnadu

இந்நிலையில்தான் பாஜக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் மீதான விவாதத்தில் பாஜக அரசை எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சித்தன. இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இந்த தீர்மானத்திற்கு பதிலளித்து பேசி வருகிறார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசி வரும் மோடி, தமிழ்நாடு குறித்து நிறைய இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அதாவது, "கடந்த 2014ம் ஆண்டிலிருந்த காங்கிரஸ் மக்களால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர்.

கடந்த 2018ம் ஆண்டு என் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். அப்போதே நான் கணித்தேன் 5 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இதே போல நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என. அதேபோல கொண்டுவந்திருக்கிறார்கள். அப்போது இவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை. எனவேதான் 2019ம் ஆண்டும் நாங்கள் வெற்றிபெற்றோம். இந்த முறை கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் எங்களுக்கானதல்ல. அவர்களுக்கானது.

ஒவ்வொரு முறையும் இவர்கள் நோ பால் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதில் நாங்கள் சிக்ஸர் அடிக்கிறோம். சதம் அடிக்கிறோம். இப்போதும் அவர்கள் நோ பால்தான் போட்டிருக்கிறார்கள். எனது மூன்றாவது முறை ஆட்சியின்போது இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்ந்திருக்கும். அப்போதும் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவார்கள். 1964ம் ஆண்டிலிருந்தே தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியா என்றால் வடநாடு என்று திமுக அமைச்சர் குறிப்பிடுகிறார். திமுகவை பொறுத்த வரையில் தமிழ்நாடு இந்தியாவில் இல்லை என்று கருதுகிறார்கள் என நினைக்கிறேன். தமிழக மண் ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், அப்துல் கலாம் போன்ற தலைவர்களை கொடுத்த மண். பெரிய பெரிய தலைவர்களை கொடுத்த தமிழ்நாட்டிலிருந்து இப்படியான அமைச்சர்களும் வந்திருக்கின்றனர்" என்று விமர்சித்துள்ளார்.

முன்னதாக பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். ஜெயலலிதா விவகாரம், இந்தி எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போன்ற விவகாரங்களில் நிர்மலா, திமுக மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதற்கு முன்னர் ஸ்மிருதி ராணியும் திமுக மீது விமர்சனங்களை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+