ஓமிக்ரான் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் மருத்துவ கட்டமைப்பு.. பிரதமர் மோடி தகவல்
டெல்லி: ஓமிக்ரான் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியாவில் 18 லட்சம் படுக்கைகள், 1.40 லட்சம் ஐசியு படுக்கைகள் தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
Recommended Video
உலகம் முழுவதும் ஓமிக்ரான் பரவல் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் இன்று கிறிஸ்துமஸ் தினத்தன்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஓமிக்ரான் பரவலை கண்டு பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், அரசு எவ்வித தொற்றையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக கூறினார்.
இந்தியாவில் 18 லட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுகைகள், 5 லட்சம் ஆக்சிஜன் படுக்கைகள், 1.40 லட்சம் ஐசியூ படுக்கைகள் தயாராக உள்ளதாகவும் பிரதமர் கூறினார். மேலும் 9 லட்சம் குழந்தைகளுக்கான ஐசியூ மற்றும் ஐசியூ அல்லாத படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்சிசன் தயாரிப்பு மையங்கள், 4 லட்சம் ஆக்சிசன் சிலிண்டர்கள் நாடு முழுவதும் வினியோகிக்கப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இந்தியாவில் 61 சதவீத வயது வந்தோர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட 90% பேர் முதல் டோஸ் தடுப்பு ஊசியை போட்டுக் கொண்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications