உங்கள் பிறந்த நாளுக்கு என்ன வேண்டும்.. ஆசையாக வந்த கேள்விகள்.. மோடி சொன்ன எதிர்பார்க்காத பதில்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்த நாளையொட்டி நேற்று அவருக்கு வாழ்த்துக்கள் பல மூலைகளில் இருந்தும் குவிந்தன.
ஒவ்வொருவர் வாழ்த்துக்கும், நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நன்றி தெரிவிப்பதற்கே, நேற்று இரவு அவருக்கு நேரம் போதவில்லை.
என்னதான் இந்தியா போன்ற ஒரு மாபெரும் நாட்டின் பிரதமராக இருந்தாலும் மோடிக்கும் தனிப்பட்ட ஆசை இருக்கும் அல்லவா.. அப்படியான ஒரு ஆசையை அவர் தனது பிறந்தநாள் தினத்தை ஒட்டி வெளிப்படுத்த வேண்டும் என்று வாழ்த்திய பலரும் கேட்டனர்.

ஆசையை கூறிய மோடி
தனது ஆசை என்ன என்பதை டுவிட்டர் பக்கத்தில் வாயிலாக மோடி வெளிப்படுத்தியிருந்தார். அவர் கூறியதை பாருங்கள்: எனது பிறந்தநாளுக்கு என்ன வேண்டும் என்று நீங்கள் பலரும் கேட்டிருந்தீர்கள்.
எனக்கு இப்போதைக்கு உடனடியாக தேவை இதுதான்: தொடர்ந்து முககவசம் அணியுங்கள், அதையும் முறையாக அணியுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். இரண்டு யார்டு அளவுக்கு இடைவெளி இருக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.

கூட்டம் வேண்டாம்
கூட்டமான இடங்களை தவிர்த்து விடுங்கள். உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துங்கள். நமது பூமியை ஆரோக்கியமானதாக மாற்றுவோம். இப்படிக் கூறியுள்ளார் நரேந்திர மோடி.

புகழும் ஆதரவாளர்கள்
இதை பார்த்த பாஜக ஆதரவாளர்கள் அந்த ட்விட்டர் பின்னூட்டத்தில் நாட்டு நலனை பற்றி தனது பிறந்தநாளில் கூட கவலைப்படக் கூடிய ஒரே தலைவர் என்று கூறிப் புகழ்ந்து வருவதை பார்க்க முடிகிறது. புகழ்ந்தால் மட்டும் போதாது, மோடி அறிவுறுத்தியதை போல, அல்லது, அவர் ஆசைப்பட்டதைபோல, கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பின்னூட்டமிடுவதையும் பார்க்க முடிகிறது.

தலைவர்கள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல உள்நாட்டு தலைவர்கள் மட்டுமின்றி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உள்ளிட்ட பலதரப்பட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
