பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம்.. விவசாயிகள் கட்டியதை விட ஐந்து மடங்கு பணம்... மத்திய அரசு தகவல்
டெல்லி: பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ரூ.1.64 லட்சம் கோடி காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார். மக்களவை கேள்வி நேரத்தில் கேள்வி ஒன்றுக்கு மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பதில் அளித்துள்ளார். அந்த விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மத்திய அரசால் அறிவிக்கைச் செய்யப்பட்ட பயிர்களுக்கு உதவி வேளாண் அலுவலர்களால் பயிர் அறுவடைப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சராசரி விளைச்சல் விவரங்கள் கணக்கிடப்பட்டு, வறட்சி, வெள்ளம், புயல், போன்ற இயற்கை சீற்ற பாதிப்புகள் ஏற்படும்போதும், பூச்சி மற்றும் நோயினால் பயிர்களுக்கு சேதம் ஏற்படும்போதும் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

எனவே ஒவ்வொரு விவசாயியும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சில 100 ரூபாய்களை கட்டி இணைந்தால், நஷ்டம் ஏற்படும் போது அல்லது வறட்சி, வெள்ளம், பூச்சி தாக்குதல் போன்ற காரணங்களின் போது, மத்திய அரசு காப்பீடு நிறுவனங்கள் வாயிலாக கணிசமான நிதியுதவி பெறலாம்.
இந்த பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் மத்தியப் பிரதேசம் சேகோரில் தொடங்கப்பட்டது. பொதுவாக பயிர் காப்பீடு செய்த பின்னர் ஏதாவது ஒரு சம்பவம் காரணமாக பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அது குறித்து, பயிர் காப்பீடு திட்ட ஆப்பில், 72 மணி நேரத்துக்குள் விவசாயிகள் தெரிவிக்கும் வகையில், பயிர் காப்பீடு திட்டத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதன் பின் அந்த பகுதியில் உள்ள வேளாண் அதிகாரி, ஆய்வு செய்து இழப்பீட்டு பயன்களை தகுதியான விவசாயிகளின் வங்கி கணக்கில் மின்னணு முறையில் நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுப்பார். மாநில அளவில் / மாவட்ட அளவில் உள்ள குறை தீர்ப்பு குழு மூலம், விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவித்தால் கு உதவி வேளாண் அலுவலர்களால் பயிர் அறுவடைப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சராசரி விளைச்சல் விவரங்கள் கணக்கிடப்பட்டு நிவாரணம் வழங்கப்படுகிறது.
இதுபற்றிய விவரங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் கவுகான் பதில்அளித்து பேசுகையில், "தவிர்க்க இயலாத இயற்கை சீற்றங்களில் இருந்து பயிர்களுக்கு காப்பீடு அளிப்பதற்காக பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம், கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை விவசாயிகள் ரூ,32 ஆயிரத்து 440 கோடி பிரீமியம் செலுத்தி உள்ளனர். ஆனால் அவர்களுக்கு காப்பீட்டு தொகையாக ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் கோடி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் செலுத்தியதை விட 5 மடங்கு அதிகமான பணம் திருப்பி அளிக்கப்படும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications