அன்-இன்ஸ்டால் செய்ய முடியாத வகையில்.. ஸ்மார்ட்போன்களில் இன்பில்டாக வருகிறது மத்திய அரசின் ஆப்!
டெல்லி: 'சஞ்சார் சாத்தி' என்கிற அப்ளிகேஷனை, இந்தியாவில் உருவாக்கப்படும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களிலும் இன்பில்டாக கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த அப்ளிகேஷனை அன்-இன்ஸ்டால் செய்யவோ, டிசேபல் செய்யவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தவும், IMEI எண்களின் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் இது அவசியம் என மத்திய அரசு கூறுகிறது. எனவே இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் ஒவ்வொரு நிறுவனங்களும் இந்த அப்ளிகேஷனை இன்பில்டாக கொண்டுவர வேண்டும், தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் எனவும், இதற்காக 90 நாட்கள் கால அவகாசத்தையும் மத்திய அரசு கொடுத்திருக்கிறது.

நவம்பர் 21ம் தேதி இந்த உத்தரவு வெளியாகியுள்ளது. ஆப்பிள், சாம்சங், கூகுள், மோட்டோரோலா, சியோமி, ஒப்போ, விவோ உள்ளிட்ட அனைத்து ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் மொபைல்களில் இந்த அப்ளிகேஷனை டிசேபல் செய்ய முடியாத வகையில் கொடுக்க வேண்டும். இது இன்பில்ட் அப்ளிகேஷன் என்பதால், அதை அன்-இன்ஸ்டால் செய்ய முடியாது.
புதியதாக தயாரிக்கப்படும் போன்கள் மட்டுமல்லாது, விற்பனைக்காக இருக்கும் டிவைஸ்களிலும் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ய வேண்டும். சாப்ட்வேர் அப்டேட் மூலம் இந்த செயலியை இன்ஸ்டால் செய்ய வைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
போலியான IMEI எண்களைக் கொண்ட மொபைல் போன்கள் தொலைத்தொடர்பு சைபர் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. எனவே சைபர் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான செயல்களைக் கண்டறியவும், இந்த செயல்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் 'சஞ்சார் சாத்தி' ஆப் உதவும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. மக்களின் பாதுகாப்பை இந்த செயலி அதிகரிக்கும் என்று மத்திய அரசு கூறுகிறது.
என்னதான் மத்திய அரசு இது குறித்து நம்பிக்கை தெரிவித்திருந்தாலும் தனியுரிமை (பிரைவசி) பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். மத்திய அரசு நேரடியாக எங்களை கண்காணிக்காது? என்பதற்கு என்ன கேரண்டி என்று மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications