Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேஸ்.. சிஎன்ஜி விலையை உயர்த்த தனியார் நிறுவனங்கள் முடிவு.. பதிலடியாக மத்திய அரசு எடுத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் உடன் ஒப்பிடும் போது, இயற்கை எரிவாயு பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகளுக்கு, 25 - 30 சதவீதம் செலவு குறைவாகும்.. இதன் காரணமாக பல வாகனங்கள் நாடு முழுவதும் சி.என்.ஜி. எரிபொருள் வாகனங்களாக வேகமாக மாறி வருகின்றன. இந்நிலையில் குறைந்த விலை எரிவாயுவின் அளவை 20 சதவீதம் வரை மத்திய அரசு குறைத்து விட்டதால், சி.என்.ஜி. எரிபொருள் விலையை உயர்த்த தனியார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

நிலம் மற்றும் கடற்படுகைக்கு அடியில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயு, சி.என்.ஜி. எரிவாயுவாக மாற்றப்படுகிறது. அந்த எரிபொருள், வாகனங்களை இயக்க பயன்படுத்தப்படுகிறது. குழாய் வழி சமையல் எரிவாயுவாகவும் பயன்படுத்தப்படுகிறது. இப்படி இயற்கையாக கிடைக்கும் எரிபொருளை எடுக்க செலவு குறைவு என்பதால். இயற்கை எரிவாயுவில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக வேகமாக அதிகரித்து வருகிறது.

gas cng vehicle

மத்திய அரசுமே கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்கவும், பெட்ரோலிய பொருட்களுக்கு மாற்றாக, இயற்கை எரிவாயுவை எரிபொருளாக பயன்படுத்துமாறு, அனைத்து தரப்பினரையும் ஊக்குவித்து வருகிறது. இதற்காக இந்தியா முழுவதுமே பொதுத்துறை நிறுவனங்கள் திரவநிலை இயற்கை எரிவாயு முனையங்களை அமைத்துள்ளன.

மேலும் வெளிநாடுகளில் இருந்தும் கப்பலில் திரவ நிலை எரிவாயு எடுத்து வரப்படுகிறது. இந்த எரிவாயு, வீடுகளுக்கு பி.என்.ஜி., அதாவது குழாய் வழி எரிவாயுவாகவும்; வாகனங்களுக்கு சி.என்.ஜி., எனப்படும், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவாகவும் பொதுத்துறை நிறுவனங்கள் வினியோகம் செய்கின்றன.

இந்நிறுவனங்கள் வரும் 2030க்குள் பல கோடி வீடுகளுக்கு குழாய் வழித்தடத்திலும் இயற்கை எரிவாயு வினியோகிக்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை போன்ற நகரங்களிலும், சி.என்.ஜி., மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் பல இடங்களில் சிஎன்ஜி கேஸ் மையங்கள் செயல்படுகின்றன. பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் உடன் ஒப்பிடும் போது, இயற்கை எரிவாயு பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகளுக்கு, 25 - 30 சதவீதம் செலவு மிச்சம் ஆகும். இதனால், எரிபொருள் செலவை மிச்சப்படுத்த பலரும், குறிப்பாக வாடகை வாகனங்களை ஓட்டுவோர், சி.என்.ஜி., எரிவாயுவில் ஓடும் வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இது ஒருபுறம் எனில், பழைய வயல்களில் இருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவை நகரங்களில் சி.என்.ஜி. வினியோகத்தில் ஈடுபட்டுள்ள இந்திரபிரஸ்தா கியாஸ், அதானி டோட்டல் கியாஸ், மகாநகர் கியாஸ் ஆகிய தனியார் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் மத்திய அரசு வழங்குகிறது. இதற்கிடையே, கடந்த 16-ந் தேதியில் இருந்து குறைந்த விலை எரிவாயுவின் அளவை 20 சதவீதம் வரை மத்திய அரசு குறைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், தங்களது லாபத்தின் அளவு குறையும் என்று மேற்கண்ட தனியார் நிறுவனங்கள் கவலை அடைந்திருக்கின்றன..

லாப சரிவை ஈடுகட்ட அந்த நிறுவனங்கள் சி.என்.ஜி. எரிபொருள் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன. கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை விலை உயரும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்தவிலை உயர்வை மத்திய அரசு விரும்பவில்லை.. சிஎன்ஜி விலையை உயர்த்தக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளன.

சிஎன்ஜி மூலம் தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபம் ஈட்டி வந்த நிலையில், புதிய வயல்களில் இருந்து கிடைக்கும் இயற்கை எரிவாயு மூலம் லாப பற்றாக்குறையை ஈடுகட்டிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. இதன் மூலம் விலை உயர்வை தடுக்க முடியும் என்று மத்திய அரசு என்றும் அரசு நம்புகிறது. ஆனால் விலையை உயர்த்தியே ஆக வேண்டும் என்றால், அதை நியாயப்படுத்த ஒவ்வொரு கட்டத்திலும் ஆகும் உற்பத்தி செலவு விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு விளக்கம் கேட்டிருக்கிறது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+