ஹோட்டல் அறையில் உல்லாசம்.. ஜன்னலை மூட மறந்த லவ் ஜோடி! வேடிக்கை பார்த்தவர் செய்த காரியத்தால் ட்விஸ்ட்
டெல்லி: காதல் மயக்கத்தில் இளம் ஜோடிகள் ஜன்னல் கதவை மூட மறந்து உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த ஓரமாக சாலையில் நடந்து சென்ற ஒருவர் இதைப் பார்த்தபடி நிற்க, ஏன் இந்த வாலிபர் இங்கு நிற்கிறார் என்று பார்த்ததில் அவர்களும் இளம் ஜோடிகள் உல்லாசமாக இருப்பதை பார்த்துள்ளனர். இப்படியே வருகிறவர் போகிறவர் என பலரும் கூட்டமாக அங்கு நிற்கத் தொடங்கினர். சிறிது நேரத்தில் டிராபிக் ஜாம் ஏற்படும் அளவுக்கு அங்கு கூட்டம் கூடி நின்று இளம் ஜோடிகள் உல்லாசமாக இருப்பதை பார்த்துக்கொண்டே இருந்துள்ளனர்.
இவ்வளவு கூட்டம் கூடியும் இளம் ஜோடிகள் இதை கவனிக்காமல் உல்லாசமாக இருந்துள்ளனர். பெரிய அளவில் டிராபிக் ஜாம் ஏற்படவே போலீசார் அங்கு வந்து பார்த்து இருக்கிறார்கள். இதன்பின்னர் வேடிக்கை பார்த்தவர்களை போலீசார் விரட்டி விட்டு நடந்தது பற்றி இளம் காதல் ஜோடியிடம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம் காதல் ஜோடி
இளம் காதல் ஜோடிகள் தங்களை மறந்து பொது இடங்களில் சில நேரங்களில் சல்லாபத்தில் ஈடுபடுவது பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கிறது. பார்க்குகள், பீச்கள் ஏன் சாலையில் பைக்கில் செல்லும் போது கூட சில இளம் ஜோடிகள் நடந்து கொள்ளும் விதம் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.
தனி அறையில் செய்ய வேண்டியதை இப்படி பொது இடத்தில் செய்வதா? என சிலர் முணுமுணுப்பதை கூட காண முடியும். இதேபோன்ற ஒரு சம்பவம்தான் ராஜஸ்தானில் நடந்துள்ளது. ஹோட்டல் அறையில் தனி ரூம் எடுத்து உல்லாசமாக இருந்த காதல் ஜோடி, தங்களின் அறை ஜன்னல் கதவை மூட மறந்து இருக்கிறது. இதை அவ்வழியாக திரண்ட மக்கள் வேடிக்கை பார்க்கவே அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு இளம் காதல் ஜோடி ஒன்று வந்துள்ளது. இந்த ஜோடி அங்குள்ள அறையை எடுத்து புக் செய்து இருக்கிறார்கள். ஏசி அறை என்றாலும் கூட காற்றோட்டமாக இருக்கட்டும் என நினைத்தார்களோ என்னவோ.. சாலையோரம் உள்ள அறையை அந்த ஜோடி புக் செய்தது.
ஜன்னலை மூட மறந்தனர்
ஜன்னல் கண்ணாடி அருகே இருந்தால் சாலையோரம் நன்றாக தெரியும் என்பதால் அங்கிருந்து வேடிக்கை பார்த்தபடியே இந்த ஜோடி பேசிக்கொண்டு இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் எல்லை மீறிய செயலில் இந்த ஜோடி ஈடுபட்டுள்ளது. காதல் மயக்கத்தில், ஜன்னல் கண்ணாடியின் திரைச்சிலையை மூட மறந்து இருக்கிறார்கள்.
காதலுக்குதான் தான் கண் இல்லை என்பார்களே.. அதேபோல ஜன்னல் இருப்பதை இந்த ஜோடி மறந்து அத்துமீற.. இந்தக் காட்சிகள் ஹோட்டலுக்கு வெளியே அப்படியே தெரிந்துள்ளது. இதனை அவ்வழியாக சென்ற சிலர் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். இளைஞர் ஒருவர் இதனை செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டாராம்.
போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வரை
இந்த வீடியோவை பார்த்த சிலர், அருகில் உள்ள இடம் போல இருக்கிறது என சம்பவ இடத்திற்கே வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். வாகன ஓட்டிகளும் வண்டியை நிறுத்த அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், என்ன ஆச்சு.. என அங்கு வந்த போலீசாருக்கு என்ன நடந்தது என்று தெரியவந்துள்ளது.
வேடிக்கை பார்த்தவர்களை விரட்டிய போலீசார்
இதையடுத்து அங்கு நின்று வேடிக்கை பார்த்தவர்களை விரட்டியடித்த போலீசார், போக்குவரத்தை சீர் செய்தனர். அந்த ஹோட்டலுக்கு சென்று இளம் ஜோடிக்கும் நடந்த சம்பவத்தை விளக்கியுள்ளனர். இதைக்கேட்டு காதல் ஜோடி அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே, காதல் ஜோடி தனிமையில் இருந்ததை சமூக வலைத்தளத்தில் பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
நெட்டிசன்கள் அறிவுரை
இதையடுத்து, அவரை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் காதல் ஜோடியின் செயலையும் நெட்டிசன்கள் சிலர் விமர்சித்து வருகிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அரசு பேருந்தில் கடைசி இருக்கையில் பயணித்த காதல் ஜோடி, எல்லை மீறிய செயலில் ஈடுபட்டது.
இதை நினைவுப்படுத்தி பதிவிட்டு இருக்கும் சில நெட்டிசன்கள், இப்படி பொது இடங்கள் என்று பாராமல் அத்து மீறும் காதல் ஜோடி, கொஞ்சம் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications