Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளா பாரம்பரிய உடையில் பிரியங்கா-நாடாளுமன்ற வாசலில் விதம் விதமாக போட்டோ எடுத்த அண்ணன் ராகுல் காந்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வயநாடு தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்ட பிரியங்கா காந்தி இன்று பதவியேற்றுக்கொண்டார். நாடாளுமன்றத்திற்கு வந்த பிரியங்கா காந்தி, கேரள மக்களின் பாரம்பரிய உடை அணிந்து வந்து இருந்தார். தனது தங்கை பிரியங்கா காந்தி முதல் முறையாக நாடாளுமன்றத்திற்குள் வருவதால் அவரை வாசலில் நிறுத்திய ராகுல் காந்தி, தனது செல்போனில் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிக்கு கடந்த 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின பொதுச் செயலாளரும் சோனியா காந்தியின் மகளும் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி நிறுத்தப்பட்டார்.

wayanad priyanka gandhi congress

பிரியங்கா காந்தி: தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே பிரியங்கா காந்திதான் இந்த தொகுதியில் போட்டியிட உள்ளதாக ராகுல் காந்தி அறிவித்தார். தேர்தல் தேதி அறிவிவித்த பிறகும் அதிகாரப்பூர்வமாக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டார். சாதாரண இடைத்தேர்தல் என்றாலும் பிரியங்கா காந்தி போட்டியிட்டதால் நாடு முழுவதும் கவனம் பெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 23 ஆம் தேதி எண்ணப்பட்டன.

4 லட்சம் வாக்குகள் வித்தியாசம்: இதில், பிரியங்கா காந்தி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது அண்ணன் ராகுல் காந்தி 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், பிரியங்கா காந்தியோ அவரை விட கூடுதலாக ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அசத்தினார். வயநாடு எம்பி தேர்தலில் வெற்றி பெற்றதால் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் இன்று அடியெடுத்து வைத்தார்.

தங்கையுடன் செல்ஃபி: பிரியங்கா காந்திக்கு சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக நாடாளுமன்றம் வந்த பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் எம்பிக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரிடம் பல எம்.பிக்கள் செல்பி எடுத்துக்கொண்டனர். பின்னர் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் போது அங்கே நின்ற ராகுல் காந்தி, ஒரு நிமிடம் வெயிட் எனக்கூறி தனது செல்போனில் போட்டோ எடுத்தார்.

கேரள உடை: அண்ணன் - தங்கை இடையேயான அன்பை வெளிப்படுத்தும் வகையில், அவர்களது செயல்பாடு அமைந்தது. முன்னதாக பிரியங்கா காந்தி கேரள பெண்கள் அணியும் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தார். வயநாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளதால், ஆடையிலும் அவர்களின் கலாசாரத்தை வெளிக்காட்டும் விதமாக பிரியங்கா காந்தி நடந்து கொண்டுள்ளதாக வயநாடு தொகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

பிரியங்கா காந்தி பெற்ற வாக்குகள்: வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இடது முன்னணி வேட்பாளர் சத்யன் மொகேரி 2,11,407 - வாக்குகளும், பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், 1 லட்சத்து 9 ஆயிரத்து 939 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் பிரியங்கா 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் ராகுல் காந்தி 6,47,445 வாக்குகள் பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இடது முன்னணி வேட்பாளர் ஆனி ராஜாவை விட 3,64,422 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார். ஆனால் பிரியங்கா, தனது அண்ணனை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். களம் இறங்கிய முதல் தேர்தலிலேயே இமாலய வெற்றியை பிரியங்கா பதிவு செய்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களில் 13 பேர் டெபாசிட் இழந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+