டிவிட்டரில் என்ட்ரி கொடுத்த பிரியங்கா காந்தி.. முதல் நாளே வைரல்.. உருகிய ராபர்ட் வத்ரா!
தீவிர அரசியலில் இறங்கி இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி தற்போது டிவிட்டருக்கும் வந்து இருக்கிறார்.
Recommended Video

டெல்லி: தீவிர அரசியலில் இறங்கி இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி தற்போது டிவிட்டருக்கும் வந்து இருக்கிறார். இன்று காலையில்தான் இவர் டிவிட்டர் கணக்கை தொடங்கினார்.
பிரியங்கா காந்தி வத்ரா என்ற பெயரில், @priyankagandhi என்ற ஐடியில் இவர் இயங்கி வருகிறார். இவர் டிவிட்டரில் இதுவரை எந்த பதிவையும் இடவில்லை.
இவர் டிவிட்டர் கணக்கை தொடங்கிய 2 மணி நேரத்தில் 63 ஆயிரம் பின்தொடர்பாளர்கள் குவிந்து இருக்கிறார்கள். இவருக்கு மிக வேகமாக பின்தொடர்பாளர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

பலர் பேசினர்
பிரியங்கா காந்தியின் டிவிட்டர் வருகை டிவிட்டரில் பெரிய வைரலானது. பலரும் இவர் வருகை குறித்துதான் பேசிக்கொண்டு இருந்தார்கள். காங்கிரஸ் கட்சியினர் மட்டுமில்லாமல் பாஜகவினர் கூட இவரின் டிவிட்டர் வருகை குறித்துதான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

சூப்பர் வைரல்
இவர் டிவிட்டருக்கு வந்த முதல்நாளே வைரலாகத்தான் வந்தார். எப்படி என்றால், உத்தர பிரதேசத்தில் பிரியங்கா நடத்திய பேரணி பற்றி #PriyankaUPRoadshowதான் தற்போது தேசிய அளவில் டாப் 1டிரெண்டிங்கில் சென்று இருக்கிறது. அவர் டிவிட்டரில் கால் வைத்த முதல் நாளே தேசிய அளவில் ஹிட் அடித்து இருக்கிறார்.
|
காங்கிரஸ் டிவிட்
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி டிவிட் செய்துள்ளது. அதில் பிரியங்கா காந்தி டிவிட்டருக்கு வந்துள்ளார் . அவரின் டிவிட்டர் பக்கம் இதுதான் அவரை நீங்கள் பின் தொடரலாம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
வாழ்த்துகள்
இந்த நிலையில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது போஸ்ட்டில், ''இந்தியாவின் மக்களுக்கு சேவை செய்ய, உத்தர பிரதேசம் நோக்கி பயன்படும் உனக்கு என்னுடைய வாழ்த்துகள். எனக்கு நல்ல தோழியாக, நல்ல மனைவியாக, குழந்தைகளுக்கு மிக சிறந்த தாயாக இருக்கிறார். தற்போது மிகவும் தீமையான பழிவாங்கும் அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. ஆனால் எனக்கு தெரியும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டியது அவளின் கடமை, தற்போது அவள் மக்களின் கைகளில் இருக்கிறாள்.. அவளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications