டெல்லி அரசு வீடு... காலி செய்தார் பிரியாங்கா காந்தி... அடுத்து எங்கே போவார்?
டெல்லி: டெல்லியில் மத்திய அரசால் தனக்கு அளிக்கப்பட்டு இருந்த வீட்டை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி காலி செய்தார். கடந்தாண்டு அவருக்கு சிறப்பு பாதுகாப்புப் படை வாபஸ் பெற்ற பின்னர் அவருக்கு வழங்கப்பட்ட வீட்டையையும் காலி செய்யுமாறு மத்திய ஹவுசிங் மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் டெல்லியில் 35, லோதி எஸ்டேட்டில் இருந்த வீட்டை பிரியங்கா காந்தி காலி செய்தார். மத்திய ஹவுசிங் மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் வீட்டை ஜூலை ஒன்றாம் தேதி காலி செய்யுமாறு கூறியிருந்தது. 01/08/2020 தேதிக்கு மேல் தங்கினால், பழுதுபார்ப்பு கட்டணம் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பின்னர் அவர் குடியிருந்த வீடு பாஜக எம்.பி.யும், செய்தி தொடர்பாளருமான அனில் பலுனிக்கு ஒதுக்கப்பட்டது. இசட் ப்ளஸ் பாதுகாப்பு இல்லாதவர்களுக்கு வீடு ஒதுக்க வேண்டியதில்லை என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்தால் மட்டுமே ஒதுக்க வேண்டும் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்து இருந்தது.

கடந்த 1997ஆம் ஆண்டில் பிரியங்கா காந்திக்கு டெல்லியில் அரசு வீடு ஒதுக்கப்பட்டது. தற்போது டெல்லி அரசு வீட்டை காலி செய்திருக்கும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் தனது உறவினரின் கவுல் நிவாஸ் வீட்டுக்கு பிரியங்கா செல்ல இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். வரும் 2022ல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் இனி அதிகமாக அவர் அங்குதான் தங்குவார் என்று கூறப்படுகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications