2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்.. வங்கியில் மாற்ற இது அவசியம்.. படிவத்தில் கேட்கப்படும் விவரங்கள்
டெல்லி: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரும் 23 ஆம் தேதி முதல் வங்கிகளில் 2 ஆயிரம் நோட்டுக்களை செலுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் அதற்கான படிவம் மற்றும் அதை செலுத்துவதற்கான நடைமுறை விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதன் விவரங்களை பார்க்கலாம்
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அதாவது அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000-ம் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. இதனால், மக்கள் தங்கள் கைகளில் இருந்த பணத்தை வங்கிகளில் கொண்டு போய் செலுத்த கடும் அவதிப்பட்டனர்.

அதன்பிறகு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2 ஆயிரம் ரூபாய் தாள்கள் கிடைக்காமலும் மக்கள் திண்டாடினர். அதன் பிறகு நாட்கள் செல்ல செல்ல நிலைமை படிப்படியாக சீரானது. அதன்பிறகு படிப்படியாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்து குறைந்து வந்ததை காண முடிந்தது.
கடந்த 2020-ம் ஆண்டில் இருந்தே ஏடிஎம்களில் இருந்து ரூ.2,000 நோட்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டது. அதேபோல், 2,000 ரூபாய் நோட்டு அச்சிடுவதே 2018-19-ம் ஆண்டு நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், மக்கள் மத்தியில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது. ஏதோ ஒன்றிரண்டு தாள்களை எப்போதாவது அரிதாக காண முடிந்ததே தவிர பெரும்பாலான தாள்கள் எங்கே சென்றது கூட என்று தெரியவில்லை.
குறிப்பாக கடந்த ஆண்டு மே மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து குறைந்ததை அப்பட்டமாக காட்டியது. 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 274 கோடி எண்ணிக்கையிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும், 2021 மார்ச் மாதம் அந்த எண்ணிக்கை 245 கோடியாகவும், 2022 மார்ச் மாதம் 214 கோடியாகவும் குறைந்து இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி நாட்டில் சுமார் 3 லட்சம் கோடி மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. இது புழக்கத்தில் உள்ள மொத்த நோட்டுகளில் 10.8 சதவீதம்தான் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் தான் நேற்று முன் தினம் இரவு, நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
அதாவது, புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மே 23 ஆம் தேதி முதல் திரும்ப பெறப்படும் என்றும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு மூலம் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், மக்கள் தங்கள் கைகளில் சேமிப்பாக வைத்து இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்த ஆயத்தமாகி வருகின்றனர். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை ஒரே நேரத்தில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு மேல் மாற்றிக்கொள்ள முடியாது. எனினும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள உச்ச வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.
இந்த நிலையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் செலுத்துவதற்கான நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் செலுத்துவதற்கான விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த விண்ணப்ப படிவத்தில், வங்கி கிளையின் பெயர், அந்த வங்கியில் கணக்கு இருந்தால் அதன் எண், பணம் செலுத்துபவரின் பெயர் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசன்ஸ், மக்கள் தொகை பதிவேடு அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒன்றின் அசல் அட்டை காட்டப்பட வேண்டும். காட்டும் அடையாள அட்டையின் எண்ணை படிவத்தில் குறிப்பிட வேண்டும். எத்தனை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செலுத்தப்படுகிறது எவ்வளவு மதிப்பு என்பதையும் படிவத்தில் எழுத வேண்டும். வங்கியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை செலுத்தும் வாடிக்கையாளர் தனது கையெழுத்துடன் இடம் மற்றும் தேதி குறிப்பிட்டு வங்கியில் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications