கொரோனாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க என்ன செய்யலாம்... ஆயுஷ் அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறை
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ள நிலையில் குழந்தைகளைப் பாதுகாக்க ஆயுஷ் அமைச்சகம் வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
டெல்லி: குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் வலுவானது, ஆனால் கொரோனா வைரஸ் பல திரிபுகளாக உருவாகி வருகின்றன என்பதால், அதன் பாதிப்பிலிருந்து தப்பிக்க கோவிட் -19 தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆவணம் மூலம் வெளியிட்டுள்ளது.
நாட்டில் கொரோனா முதலாவது அலை, மூத்த குடிமக்களை அதிகம் பாதித்த நிலையில், பின்னர் வந்த இரண்டாது அலை இளைஞர்கள் நடுத்தர வயதினரை பெரிதும் பாதித்தது. பச்சிளம் குழந்தைகள் முதல் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
ஆயுஷ் அமைச்சகம் கொரோனா தொற்றுநோய்களின் போது குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் 58 பக்க ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமுன் காப்போம்
தொற்றுநோயானது பொதுவாக பெரியவர்களை விட குழந்தைகளுக்கு லேசான பாதிப்பை ஏற்படுத்தும். கோவிட் -19 நோய்த்தொற்று உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு எந்தவொரு குறிப்பிட்ட சிகிச்சையும் தேவையில்லை. இந்த கொடிய வைரஸிலிருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்கான சிறந்த அணுகுமுறை தற்காப்பு நடவடிக்கைகள் ஆகும்.

முக்கிய பரிந்துரைகள்
கொரோனா பேரிடர் காலத்தில் முக கவசங்களை எப்படி பயன்படுத்துவது என்று குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். யோகா பயிற்சி அளிப்பது, ஆயுர்வேத மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம். ஐந்து நோய் எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்காணித்தல் மற்றும் பெற்றோருக்கு தடுப்பூசி போடுவது ஆகியவை ஆவணத்தில் செய்யப்பட்ட முக்கிய பரிந்துரைகள் ஆகும்.

நெறிமுறைகள்
குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் வலுவானது, ஆனால் கொரோனா வைரஸ் பல வேரியண்ட்களாக உருவாகி வருகின்றன என்பதால், அதன் பாதிப்பிலிருந்து தப்புக்க கோவிட் -19 தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம் என்று ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு நோய் தொற்று
உடல் பருமன், டைப் -1 நீரிழிவு நோய் அல்லது நோயெதிர்ப்பு குறைவாக உள்ள, அல்லது வேறு நோய்கள் ஏதெனும் இருக்கும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது என ஆயுஷ் வெளியிட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயுஷ் அமைச்சகத்தின் ஆவணம்
கோவிட் -19 தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுதலானது சிகிச்சைக்கான மாற்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது" என்று அந்த ஆவணத்தில் உள்ள மறுப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆயுஷ் ஆவணம் வெளியிட்டுள்ள ஆவணத்தை முழுமையாக காண கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

குழந்தைகளுக்கு ஆவணம்
பெற்றோர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆயுஷ் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும் எனவும், ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளையும், அனைத்து குழந்தைகளும் பின்பற்ற வேண்டும் என்பதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு அவசியம்
கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை தனிமைப்படுத்துவது அவசியம். அவர்களை பாட்டி, தாத்தாக்கள், மூத்த குடிமக்களிடம் இருந்து இடைவெளி விட்டு பழக வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு நோய் தொற்று குணமடைந்தாலும் வயதானவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் என்பதால் ஆயுஷ் அமைச்சகம் இந்த அறிவுரையை வழங்கியுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications