விடாப்பிடியாக நிற்கும் இந்தியா கூட்டணி! விட்டுக்கொடுக்காத மத்திய அரசு! டெல்லியில் நீடிக்கும் பதற்றம்
டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் இன்று 3வது நாளாக போராட்டம் நீடித்திருக்கிறது. கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்திருந்த நிலையில், இன்றும் ராகுல் காந்தி போராட்டத்தில் பங்கேற்பார் என்று சொல்லப்படுகிறது.
போராட்டத்தில் பங்கேற்றிருந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது, தங்களை தாக்கியதாகவும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.

இப்படி இருக்கையில் தற்போது 3வது நாளாக போராட்டம் தொடங்கியிருக்கிறது. இன்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர். இதனால் மொத்த டெல்லியும் மீண்டும் பதற்றமடைந்திருக்கிறது.
டெல்லியை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த இந்தியா கூட்டணி
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜந்தர் மந்தரில், அப்போதைய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக CJP தீவிர போராட்டங்களை முன்னெடுத்திருந்தது. ஆனால், காங்கிரஸ் இதில் போதிய அளவுக்கு தீவிரமாக பங்கேற்கவில்லை என்று விமர்சனங்கள் இருந்தன. இப்போது மற்றொரு போராட்டம் வெடித்திருக்கிறது. இந்த போராட்டத்திற்கும் காங்கிரஸ் சைலண்ட் மோடில் இருந்தால்.. ராகுல் காந்தியை இளைஞர்கள் ஓரம் கட்டிவிடுவார்கள் என்று காங்கிரஸ் பயந்திருந்தது.
LIVE: Opposition MP's Protest March Against Vote Chori | New Delhi https://t.co/oFUzdnG9gG
— Congress (@INCIndia) October 8, 2026
எனவே, இந்தியா கூட்டணி தலைவர்களுடன் காங்கிரஸ் தீவிரமாக களமிறங்கியிருக்கிறது. இதன் அடிப்படையில்தான் தற்போது டெல்லி ஜந்தர் மந்தரை மொத்தமாக இந்தியா கூட்டணி கட்சிகள் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள். நேற்று முன்தினம் தொடங்கி நேற்று, இன்று என 3வது நாளாக போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. இன்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் மீண்டும் கைது செய்யப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. டெல்லி முழுவதையும் போலீசார் முழுமையாக கண்ட்ரோலில் எடுத்திருப்பதால், டெல்லியில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
