ஜந்தர் மந்தரில் போராட்டம் நடக்காது.. நீதிமன்றத்தில் உறுதியாக சொன்ன மத்திய அரசு! பிளான் மாறுது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாளை டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடந்த காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் ஜந்தர் மந்தருக்கு பதில், போராட்டம் நடந்த வேறு ஒரு இடத்தை ஏற்பாடு செய்து தருவதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

டெல்லியின் இதய பகுதியாக இருக்கும் ஜந்தர் மந்தர் பகுதிக்கு பதிலாக, அனைத்து வசதிகளுடன் கூடிய வேறு ஒரு புதிய இடத்தை அமைதியான போராட்டங்களுக்காக தேர்வு செய்வது குறித்து நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

Jantar Mantar

மத்திய அரசின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் உஷார் மேத்தா, தலைமை நீதிபதி சூரிய காந்த் தலைமையிலான அமர்விடம் இந்த தகவலை தெரிவித்தார். அதன்படி, டெல்லியில் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துவதற்கு ஜந்தர் மந்தர் அல்லாத வேறு ஒரு தகுந்த இடத்தை கண்டறிந்து ஒதுக்குவது குறித்து அதற்குரிய நடவடிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.

டெல்லியில் பொதுமக்களின் அத்தியாவசிய போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், அதே சமயம் போராட்டம் நடத்துபவர்களின் உரிமை பாதிக்கப்படாத வகையிலும்.. அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட ஒரு புதிய மாற்று இடத்தை அமைதியான போராட்டங்களுக்காக அடையாளம் கண்டு ஒதுக்குவது காலத்தின் கட்டாயம் என்பதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று நீதிமன்றம் கூறியது.

எனவே, இந்த ஆரோக்கியமான ஆலோசனையை தகுதி வாய்ந்த அரசு அதிகாரிகள் தீவிரமாக பரிசீலித்து, இதற்கான தகுந்த முடிவை சீக்கிரமாக எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடக்கும் போது, அங்கு வரும் ஆயிரக்கணக்கான மக்கள், நோயாளிகள் மற்றும் பள்ளி மாணவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதே சமயம் போராட்டக்காரர்களை தடுப்பதற்காக, டெல்லி முழுவதும் ரயில்களை ரத்து செய்வது மெட்ரோ ரயில் சேவையை நிறுத்துவது போன்ற கட்டுப்பாடுகள் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை பாதிப்பதாக உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்து இருந்தது.

எனவே இந்த இரண்டு சிக்கல்களுக்கும் நிரந்தர தீர்வாகவே, போராட்டக்காரர்களுக்கு தேவையான கழிப்பறை குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளுடன் கூடிய பிரத்தியேகப் போராட்ட மைதானத்தை அல்லது இடத்தை டெல்லியில் உருவாக்குவதற்கு சட்டபூர்வமான அடித்தளத்தை உச்சநீதிமன்றம் இன்று அமைத்துள்ளது.

இப்படியான இடம் அமைக்கப்பட்டால்.. நாளை பின்பு எந்த போராட்டமாக இருந்தாலும் அங்குதான் நடக்கும். ஜந்த மந்தர் பகுதியில் எந்த பாதிப்பும் இருக்காது என்று சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+