செத்துப் பிழைத்த சின்ன செயற்கைக்கோள்! தோல்வியடைந்த பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட்! திடீர் ட்விஸ்ட்!
டெல்லி: இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் பயணம் எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியடைந்ததாக கூறப்படும் நிலையில், அந்த தோல்விக்கிடையே ஒரு ஆச்சரியம் தரும் தகவல் தெரிய வந்துள்ளது. பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் உடன் அனுப்பப்பட்ட ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு சிறிய செயற்கைக்கோள், அனைத்து எதிர்பார்ப்புகளையும் மீறி விண்வெளியில் இருந்து தகவல்களை அனுப்பியுள்ளதாக அதனை அனுப்பிய Orbital Paradigm நிறுவனம் தெரிவித்துள்ளது.
2026-ம் ஆண்டில் இஸ்ரோ முதல் ஏவுதல் முயற்சியாக பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட்டை ஏவியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து காலை 10.17 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்பட்டது. இதில் டிஆர்டிஓவின் EOS-N1 (அன்வேஷா) செயற்கைக்கோள், ஆயுள் சாட் போன்ற இந்திய செயற்கைக்கோள்கள் அனுப்பபட்டன.
இதுமட்டுமல்லாமல், மொரீஷஸ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட்டன.இந்நிலையில் ராக்கெட்டை ஏவப்பட்ட சில நிமிடங்களில் தனது பாதையில் இருந்து விலகியது. ராக்கெட்டின் மூன்றாம் நிலை கட்டத்தில் ஒரு விலகல் ஏற்பட்டதாகவும், தற்போது தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறியுள்ளார்.

பிஎஸ்எல்வி சி62 தோல்வி
ஆனால், ராக்கெட் ஏவுதல் முழுமையான தோல்வியா? இல்லையா? என்பது குறித்து அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஒரு ஆச்சரியம் தரும் தகவல் தெரிய வந்துள்ளது. பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் உடன் அனுப்பப்பட்ட ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு சிறிய செயற்கைக்கோள், அனைத்து எதிர்பார்ப்புகளையும் மீறி விண்வெளியில் இருந்து தகவல்களை அனுப்பியுள்ளதாக அதனை அனுப்பிய Orbital Paradigm நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தனியார் விண்வெளி நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இஸ்ரோ ராக்கெட்
பிரான்ஸைச் சேர்ந்த RIDE நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம், எதிர்காலத்தில் செயற்கைக்கோள் பராமரிப்பு, மீள்பயன்பாட்டு விண்வெளி கருவிகள் மற்றும் விண்வெளி கழிவுகளை அகற்றும் திட்டங்களுக்கு பயன்படும் என கூறப்படுகிறது. இஸ்ரோவுக்கு இது அரிதான பிஎஸ்எல்வி தோல்விகளில் ஒன்றாக இருந்தாலும், அதே நேரத்தில் சிறிய தனியார் செயற்கைக்கோள்களின் தாங்கும் திறன் மற்றும் சர்வதேச விண்வெளி ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்த சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.
பிஎஸ்எல்வி-சி62
எதிர்பாராத சூழ்நிலையில் கிடைத்த இந்த தரவுகள், எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு மிகப் பெரிய பாடமாக அமையும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஸ்பெயினைத் தலைமையகமாகக் கொண்ட Orbital Paradigm என்ற தனியார் விண்வெளி நிறுவனம், தங்களது 'கெஸ்ட்ரல் இனிஷியல் டெமோன்ஸ்ட்ரேட்டர்' (KID) என்ற சோதனை செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி-சி62 பயணத்தில் இருந்து பாதுகாப்பாக பிரிந்து, கடுமையான சூழ்நிலைகளையும் தாங்கி, பூமிக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதாக அறிவித்துள்ளது.
ஆர்பிட்டல் பாரடைம்
சுமார் 25 கிலோ எடையுள்ள, கால்பந்து அளவிலான இந்த சிறிய செயற்கைக்கோள், ஜனவரி 12-ம் தேதி பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட்டில் இணை செயற்கைக்கோளாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த பயணத்தில் ராக்கெட்டின் மூன்றாவது நிலையான PS3 கட்டத்தில் இறுதிக் கட்ட எரிப்பு நேரத்தில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பிரதான செயற்கைக்கோள் உட்பட மொத்தம் 16 செயற்கைக்கோள்கள் திட்டமிட்ட வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படவில்லை என தகவல்கள் வெளியாகின.
KID கேப்சூல் ராக்கெட்
இந்த நிலையில், அந்த தோல்வி பயணத்திலும் KID செயற்கைக்கோள் தனித்து பிரிந்து செயல்பட்டது, விண்வெளி உலகில் கவனம் பெற்றுள்ளது. Orbital Paradigm நிறுவனம் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு மத்தியில் எங்கள் KID கேப்சூல் ராக்கெட்டின் நான்காவது நிலையிலிருந்து பிரிந்தது. அது இயங்கத் தொடங்கி, மூன்று நிமிடங்களுக்கு மேல் தகவல்களை அனுப்பியது. சுமார் 28g அளவிலான கடும் ஈர்ப்பு விசையையும், மிக அதிக வெப்பத்தையும் தாங்கியுள்ளது. உள்ளக வெப்பநிலை உள்ளிட்ட முக்கிய தகவல்கள் எங்களிடம் கிடைத்துள்ளன" என்று தெரிவித்துள்ளது.
விஞ்ஞானிகள் ஆச்சர்யம்
இந்த KID செயற்கைக்கோள், மீண்டும் வளிமண்டலத்துக்குள் நுழையும் தொழில்நுட்பத்தை சோதிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. தென் பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக விழும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த இந்த கேப்சூல், கடுமையான அழுத்தங்களையும் வெப்பத்தையும் தாங்கி செயல்பட்டது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications