பி.டி. உஷாவை பார்த்தீங்களா.. போராட்டம் ஒழுக்கமின்மைக்கு சமமாம்.. மல்யுத்த வீரர்கள் மீது பாய்ச்சல்
டெல்லி: பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்/வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இதனை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மூன்றாவது முறையாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பொறுப்பு வகித்து வந்திருக்கிறார். அதுபோல இவர் உத்தரப் பிரதேசத்திலிருந்து எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஒரு சிறுமி உட்பட மல்யுத்த வீரர்களாக பயிற்சி பெறும் இளம் வீராங்கனைகள் பலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாக சக வீராங்கனைகள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த ஜனவரி மாதமே இந்த குற்றச்சாட்டு பெரியதாக வெடித்தது.

பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் சகாஷி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இதில் தலையிட்டு புகார்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள மேரிகோம் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இதன் தொடர்ச்சியாக பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து வீரர்/வீராங்கனைகள் புகாரை தெரிவித்தனர்.
அவர்கள் இந்த குற்றச்சாட்டு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தனர். இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. ஆனால் குழு அமைக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி மீண்டும் வீரர்கள் டெல்லியில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கடந்த 23ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. டெல்லி காவல்துறையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர்.

ஆனால் தற்போது வரை எஃப்ஐஆர் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. எனவே வீரர்கள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் விளக்கம் கேட்டு டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஜனவரியில் நடைபெற்ற போராட்டத்தில் அரசியல் கட்சியினர் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று வலியுறுத்தியிருந்த வீரர்கள் இந்த போராட்டத்தில் அரசியல் கட்சியினரின் ஆதரவை நாடியுள்ளனர். இந்த போராட்டத்திற்கு சிபிஎம் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், அபிநவ் பிந்த்ரா உள்ளிட்ட வீரர்களும் அதரவளித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே பாதிக்கப்பட்டோர் தரப்பில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரான பி.டி.உஷாவுக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது குறித்து இன்று கருத்து தெரிவித்துள்ள மாநிலங்களவை எம்பி பி.டி.உஷா, "விசாரணை குழுவின் அறிக்கை வெளிவரும் வரை வீரர்கள் அமைதி காத்திருக்க வேண்டும். இது விளையாட்டுக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல. இது ஒரு எதிர்மறையான அணுகுமுறை. இந்த போராட்டம் ஒழுக்கமின்மைக்கு சமமாகும்" என்று விமர்சித்துள்ளார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications