HMPV வைரஸ் புதிது அல்ல.. 2001 ஆம் ஆண்டே கண்டறியப்பட்டது.. மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா
டெல்லி: சீனாவில் அதிகரித்து வரும் HMPV வைரஸ், உலக நாடுகளை மீண்டும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் கால் பதித்து இருக்கும் நிலையில், இந்த வைரஸ் புதிது இல்லை எனவும், கடந்த 2001 ஆம் ஆண்டே கண்டறியப்பட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா கூறியுள்ளார்.
சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. சீனாவில் தற்போது குளிர் அதிகமாக உள்ள நிலையில், HMPV காரணமாக இப்போது தொற்று அதிகம் ஏற்பட்டு உள்ளது. சீனாவில் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

பருவகாலத்தில் ஏற்படும் நோய் பாதிப்பு போன்றதுதான், இது சாதாரண கிளைமேட் காய்ச்சல் போன்றதுதான் என்று சீனா மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
அதேபோல, சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தான், HMPV வைரஸ் பாதிப்பு என்பது புதிது இல்லை எனவும், கடந்த 2001 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்த வைரஸ் கண்டறியப்பட்டது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
HMPV என்பது புதிய வைரஸ் அல்ல என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் உறுதி செய்து இருக்கிறார்கள். கடந்த 2001 ஆம் ஆண்டு முதலில் கண்டறியப்பட்டது. பல வருடங்களாக உலகம் முழுவதும் இந்த வைரஸ் இருந்து கொண்டே இருக்கிறது. HMPV வைரஸ் காற்றின் மூலம், சுவாசத்தின் மூலம் பரவக்கூடியது. அனைத்து வயதினரையும் பாதிக்கும். குளிர் காலத்தில் தான் அதிகம் பரவும். சீனாவில் தற்போது பரவி வரும் வைரஸ் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications