விவசாயிகள் போராட்டத்தை சீக்கிரம் முடிங்க... அமித்ஷாவிடம் அமரிந்தர் சிங் வலியுறுத்தல்!
புதுடெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் இன்று சந்தித்து பேசினார்.
விவசாயிகள் போராட்டத்தால் பஞ்சாப் மாநில பொருளாதாரமும், நாட்டின் பாதுகாப்பும் பாதிக்கப்படுவதால் இந்த பிரச்சினையைத் விரைவில் தீர்க்கும்படி உள்துறை மந்திரியிடம் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 8வது நாளாக தொடர்ந்தது. மத்திய அரசு, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் எந்த முடிவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து பேசினார்.
விவசாயிகளின் போராட்ட நிலைமை குறித்து உள்துறை மந்திரியிடம் விளக்கிய அமரீந்தர் சிங் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த போராட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த சந்திப்புக்கு பிறகு அமரீந்தர் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் நான் தீர்க்க எதுவும் இல்லை. வேளாண் சட்டங்களுக்கு உள்துறை மந்திரியிடம் எதிர்ப்பு தெரிவித்தேன். விவசாயிகளின் போராட்டம் பஞ்சாப் மாநிலத்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து உள்ளது. மேலும், நாட்டின் பாதுகாப்பும் பாதிக்கும் அபாயம் உள்ளதால் இந்த பிரச்சினையைத் விரைவில் தீர்க்கும்படி அவரிடம் வலியுறுத்தினேன். இவ்வாறு அமரீந்தர் சிங் கூறினார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications