ட்விஸ்ட்! காங்.இல் இணைந்தார் சோனு சூட் சகோதரி.. பரபரப்பாகும் பஞ்சாப் அரசியல் களம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது.

எனவே, பஞ்சாப் மாநிலத்தில் எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.. இருப்பினும், இதுவரை அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் அக்கட்சிக்குச் சாதகமாக இல்லை.

 பஞ்சாப் சூழல்

பஞ்சாப் சூழல்

முதலில் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங்கிற்கும் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் உச்சமடைய, அமரிந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சரண்ஜித் சிங் சன்னி கொண்டு வரப்பட்டார். பஞ்சாபில் சுமார் 30% தலித்துகள் உள்ளதால் அதே சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம் இப்போது பஞ்சாபில் பிரதமர் பாதுகாப்பு குறைபாடு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

 காங்-இல் இணைந்தார்

காங்-இல் இணைந்தார்

இப்படி பஞ்சாப் மாநிலத்தில் காங். கட்சிக்கு அடுத்தடுத்து தலைவலி ஏற்பட்டுள்ள நிலையில், கடைசியில் இப்போது ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது. பிரபல சினிமா நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் மற்றும் பஞ்சாப் காங். கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். மாளவிகா வரும் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 நவ்ஜோத் சிங் சித்து

நவ்ஜோத் சிங் சித்து

இது குறித்து பஞ்சாப் காங். கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கூறுகையில், "இது கேம் சேன்ஞர். இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில் இது காங். கட்சிக்கு பெரும் பலத்தைத் தரும். அவர் நல்ல படித்த ஒரு பெண். இது மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு உத்வேகத்தை அளிக்கும். முதல்வரும் காங். கமிட்டி தலைவரும் ஒருசேர ஒருவரைச் சந்திப்பது என்பது அரியான நிகழ்வு தான். ஆனால், அது இப்போது நடந்துள்ளது. ஏனென்றால் மாளவிகா சூட் அதற்குத் தகுதியானவர்" என்றார்.

 தேர்தலில் போட்டி

தேர்தலில் போட்டி

பொதுமக்களுக்குச் சேவை செய்யவே தான் அரசியல் களமிறங்கியுள்ளதாக மாளவிகா சூட் தெரிவித்தார். பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங், பஞ்சாப் காங். கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, மாளவிகா சூட், சோனு சூட் ஆகியோர் இருக்கும் அந்த ஃபோட்டோ தான் இணையத்தில் இப்போது வைரலாகியுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதமே. தனது தங்கை பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுவார் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+