டெல்லியில் வந்த புதின்.. மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை! உற்று நோக்கும் சீனா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ள இந்த சந்திப்பின் பின்னணி பற்றி பார்க்கலாம்.

Putin BRICS India

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று டெல்லி வந்தார் ரஷ்ய அதிபர் புதின். உக்ரைன் போர் தொடங்கியதற்கு பிறகு, ரஷ்யாவுக்கு வெளியில் புதின் பங்கேற்கும் முதல் பிரிக்ஸ் மாநாடு இது என்பதால், இந்த மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

புதின் இந்தியாவில் 3 நாட்கள் தங்க இருக்கிறார். முதல் நிகழ்வாக இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை, ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்து பேசி வருகிறார்.

இருநாடுகள் இடையே நல்ல நட்பு உள்ள நிலையில் பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து விரிவாக பேசப்பட உள்ளது. இந்தியா - ரஷ்யா இடையே கச்சா எண்ணெய் வர்த்தகத்துக்கு அமெரிக்கா இடையூறு செய்து வரும் நிலையி்ல் அதனை சமாளிப்பது பற்றி விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அதன்பிறகு இரு நாடுகளின் வர்த்தக அமைச்சகங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இன்னோப்ரொம் கண்காட்சியை பிரதமர் மோடியும், புதினும் இணைந்து பார்வையிடுகின்றனர். புதினை தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் உள்ளிட்ட பல உலக தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

மாநாட்டின் இடையே புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையே அதிகாரப்பூர்வமாக தனிப்பட்ட சந்திப்புகள் எதுவும் திட்டமிடப்படவிலலை. இப்படி இருக்கையில் மோடி -புதின் இடையேயான சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.

இதையடுத்து செப்டம்பர் 12ம் தேதியான நாளை அதிகாரப்பூர்வமாக பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்க உள்ளது. நாளை ல் அரசியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் குறித்து விவாதிக்கப்படும். செப்.13 அன்று கூட்டணி நாடுகளுடன் விரிவுப்படுத்தப்பட்ட கூட்டம் நடைபெறும். இந்த மாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டு 20வது ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. அந்த வகையில் இந்த மாநாடு முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது.

அதேபோல, புதின்-மோடி பேச்சுவார்த்தையும், ரொம்பவும் முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 2030க்குள் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக அளவை 100 பில்லியன் டாலர் என்கிற அளவுக்கு வளர்க்க வேண்டும் என்பதுதான், இன்று இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் முக்கிய அங்கமாக இருக்கப்போகிறது.

மேலும் மத்திய கிழக்கு போர், உக்ரைன் போர்களுக்கு இடையே இந்த மாநாடு நடப்பதாலும், சர்வதேச கவனத்தை இது ஈர்த்திருக்கிறது.

மாநாட்டுக்கு பிரிக்ஸ் தலைவர்கள் மட்டுமல்லாது, ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்ரேரஸ் மற்றும் புதிய மேம்பாட்டு வங்கியின் தலைவர் தில்மா ரூசெஃப் ஆகியோரும் இன்று டெல்லிக்கு வருகின்றனர். இதன் காரணமாக இன்று தொடங்கி செப்.13 வரை டெல்லி வான்வெளியில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் டெல்லியை சுற்றியுள்ள 300 கி.மீ சுற்றளவுக்கு சிறப்பு அனுமதி பெற்ற விமானங்கள் தவிர மற்ற விமானங்கள் பறக்கவோ, தரையிறங்கவோ தற்காலிக தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+