நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்.. புத்தக வெளியீட்டிற்கு தடை விதித்த தேர்தல் ஆணையம்.. அதிர்ச்சி!
ரபேல் ஊழல் தொடர்பாக வெளியாக இருந்த ''நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்'' புத்தக வெளியீட்டு விழாவிற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து இருக்கிறது.
Recommended Video

டெல்லி: ரபேல் ஊழல் தொடர்பாக வெளியாக இருந்த ''நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்'' புத்தக வெளியீட்டு விழாவிற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து இருக்கிறது.
ரபேல் ஊழல் வழக்கு மீதான மறுசீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் புதிதாக தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் ஆவணங்கள் பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த வழக்கு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த நிலையில் ரபேல் தொடர்பாக இன்று வெளியாக இருந்த புத்தகம் ஒன்றை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்து இருக்கிறார்கள்.

ஊழல்
"நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்" என்ற புத்தகம் எழுத்தாளர் எஸ். விஜயன் மூலம் எழுதப்பட்டது. ரபேல் பேரத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து அவர் இந்த புத்தகத்தில் விவரித்து இருக்கிறார். ரபேல் வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில் இந்த புத்தகம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

புத்தக விழா
இதற்கான புத்தக வெளியீட்டு விழா பாரதி புத்தகாலயம் சார்பாக சென்னை கேரளா சமாஜத்தில் இன்று நடக்க இருந்தது. தி இந்து மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக இருந்தது . இந்த நிலையில் "நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்" புத்தகத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து இருக்கிறது.

நிறுத்தம்
அதோடு இந்த புத்தக வெளியீட்டு விழாவையும் தடுத்து நிறுத்தி உள்ளது. மேலும் சென்னையில் உள்ள பாரதி புத்தகாலயம் அலுவலகத்தில் இருந்த அனைத்து புத்தகங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எது விதி
தேர்தல் விதிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது. அதே சமயம் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு தேர்தல் ஆணையம் எந்த விதமான தடையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications