ராகுல் விவகாரம்: காங்.எம்பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்யனும்.. கொந்தளிக்கும் 'இளந்தாரிகள்'
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து அனைத்து காங்கிரஸ் எம்.பிக்களும் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியில் வலுத்து வருகிறதாம்.
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசினார் என ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அண்மையில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் 2 ஆண்டு சிறை தண்டனை பெறும் நபர் எம்பி, எம்எல்ஏவாக நீடிக்க முடியாது. இதனடிப்படையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு எம்பி பதவி பறிக்கபட்டது.

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டெல்லியில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து காங்கிரஸ், போராட்டங்களை நடத்தி வருகிறது. நாடாளுமன்றத்தின் இருசபைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பிக்கள் அத்தனை பேரும் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்குள் கோரிக்கை வலுத்து வருகிறது. இளம் காங்கிரஸ் எம்பிக்கள் இதனை வலியுறுத்தி வருகின்றனராம்.
மேலும் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்த லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. லோக்சபாவில் இன்று இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டு வரும் எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் தொடர்ந்து முடக்கப்படுவதால் முன்கூட்டியே இரு சபைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications