Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சத்தியத்திற்கு நேர்ந்த இழுக்கு.. காஷ்மீர் பிரச்சனையில் இப்போதும் அமைதியா? எங்கே அந்த 3 பேர்?

ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது குறித்தும், அதன் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்தும் நேரு குடும்பத்தை சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்கள் மௌனம் காப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Kashmir Issue| இதன் பிறகு காஷ்மீரில் என்னவெல்லாம் நடைபெற வாய்ப்பு உள்ளது?

    டெல்லி: ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது குறித்தும், அதன் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்தும் நேரு குடும்பத்தை சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்கள் எதுவும் பேசாமல் மௌனம் காப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தம் கிடையாது. காஷ்மீர் பாகிஸ்தானுக்கும் சொந்தம் கிடையாது. காஷ்மீர் எப்போதும் காஷ்மீரிகளுக்கே சொந்தம். அவர்கள் விருப்பப்பட்டால், நாங்கள் அவர்களுடன் இருப்போம்.

    அவர்கள் வேண்டாம் என்றால் உடனே நாங்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறுவோம், இது முன்னாள் பிரதமர் நேரு காஷ்மீர் பிரிவினையின் போது கூறியது. ஆனால் அதே காஷ்மீர் தற்போது மொத்தமாக, அதிரடியாக பாஜக தலைமையிலான மத்திய அரசால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.

    கேட்கவில்லை

    கேட்கவில்லை

    காஷ்மீரின் வரலாறை அரசியலில் ஒருவர் பயன்படுத்துகிறார் என்றால் முன்னாள் பிரதமர் நேருவின் பெயரை சொல்லாமல், யாரும் காஷ்மீர் பிரச்சனையை முழுமையாக பேச முடியாது. ஆனால் தற்போது அதே காஷ்மீரை, காஷ்மீர் மக்களிடம் எந்த அனுமதியும் கேட்காமல், பாஜக இந்தியாவுடன் முழுதாக இணைத்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அதிகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ராகுல்

    ராகுல்

    ஆனால் இவ்வளவு விஷயங்கள் நடந்தும், காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு கூட, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி (இன்னும் ராஜினாமா ஏற்கப்படவில்லை) அது குறித்து எதுவும் பேசவில்லை. ஒரு செய்தியாளர் சந்திப்பு கூட இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்தவில்லை.

    நேரு குடும்பம்

    நேரு குடும்பம்

    ராகுல் காந்திதான் தேர்தல் தோல்வி விரக்தியில் இருக்கிறார் என்பதால் அவர் பேசவில்லை என்றால், நேரு குடும்பத்தை சேர்ந்த யாருமே காஷ்மீர் பிரிவினை குறித்து பேசவில்லை. ஆம், சோனியா காந்தி இந்த காஷ்மீர் பிரச்சனை பற்றி பேசவில்லை. எதிர்கால காங்கிரஸ் தலைவர் என்று எதிர்பார்க்கப்படும் பிரியங்கா காந்தியும் இதை பற்றி பேசவில்லை.

    நேரு வம்சம்

    நேரு வம்சம்

    நேரு குடும்பத்தின் வாரிசுகளான இவர்கள், காஷ்மீர் பிரச்சனையில் இப்படி மௌனம் காப்பது அரசியல் வல்லுநர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மற்ற பிரச்சனைகளில் இவர்கள் அமைதியாக இருந்தால் கூட சரி. ஆனால் காஷ்மீர் பிரச்சனை என்பது, நேரு செய்த சத்தியத்திற்கு நேர்ந்த இழுக்கு, அந்த சத்தியத்தை பாஜக முறித்து உள்ளது. ஆனால் இப்போதும் கூட ராகுல் காந்தி, சோனியா அமைதியாக இருக்கிறார்கள்.

    பல கேள்விகள்

    பல கேள்விகள்

    இதனால் மொத்தமாக கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் இருந்தே ராகுல் காந்தி விலகுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது, காஷ்மீர் பிரச்சனையை விட இந்தியாவில் பெரிய பிரச்சனை நிலவவில்லை. ஆனாலும் அதைப்பற்றி ராகுல் பேசவில்லை. அவரின் இந்த அமைதி எந்த விதத்திலும் இந்தியாவிற்கும், அவரின் கட்சிக்கும், ஏன் அவருக்கும் கூட உதவ போவதில்லை. இதனால் ராகுல் கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் இருந்து தன்னை தூரமாக வைத்துக் கொள்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

    தொண்டர்கள் விளக்கம்

    தொண்டர்கள் விளக்கம்

    ஆனால் இதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் விளக்கமும் கொடுத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியை வடஇந்தியா முழுமையாக புறக்கணித்தது. அமேதி தொகுதியில் கூட, ராகுல் காந்தியை மக்கள் தோல்வி அடைய செய்தனர். அவர் இப்போது கட்சித் தலைவர் இல்லை, எதிர்க்கட்சியின் அவை தலைவரும் இல்லை. அப்படி இருக்கும் போது ஏன் அவரின் கருத்தை மக்கள் எதிர்பார்க்க வேண்டும் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+