டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாட்ஸ் ஆப்- பாஜக இடையே ரகசிய உறவு.. டைம்ஸ் பத்திரிகை செய்தியுடன் ராகுல் தாக்கு

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்காவின் டைம்ஸ் நாளிதழ் வாட்ஸ் ஆப்பிற்கும் பாஜகவுக்கும் இடையே உள்ள ரகசிய உறவை வெளிப்படுத்தியுள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

ஏற்கெனவே பாஜகவை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்களின் வெறுப்பு பேச்சு, ஆட்சேபனைக்குரிய கருத்துகளை பேஸ்புக் நிறுவனம் கண்டு கொள்வதில்லை என அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குற்றம்சாட்டியிருந்தது.

Rahul Gandhi attacks Modi government on Facebook hate speech

இந்த கட்டுரையை மேற்கோள்காட்டிய ராகுல் காந்தி, இந்தியாவில் முகநூலை பாஜகவும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் கட்டுப்படுத்துகிறது. சமூகவலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது என ராகுல் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பேஸ்புக்கை போல வாட்ஸ் ஆப்பையும் பாஜக கட்டுப்படுத்தி வருகிறது டைம்ஸ் புத்தகம் வெளிப்படுத்தியுள்ளது. இதை சுட்டிக் காட்டிய ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Rahul Gandhi attacks Modi government on Facebook hate speech

இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில் வாட்ஸ் ஆப் பாஜக இடையிலான ரகசிய உறவை அமெரிக்காவின் டைம் பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது. 40 கோடி இந்தியர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் ஆப், மோடி அரசின் பல்வேறு உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்ட நிலையில் இருக்க நேரிட்டுள்ளது என்பதால், வாட்ஸ் ஆப்பை பாஜக கட்டுப்படுத்தி வருகிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

 காங்கிரஸை படு குழியில் தள்ளிக் கொண்டிருக்கிறாரா ராகுல் காந்தி? காங்கிரஸை படு குழியில் தள்ளிக் கொண்டிருக்கிறாரா ராகுல் காந்தி?

English summary
Congress EX President Rahul Gandhi attacks Narendra Modi government on Facebook hate speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X