ராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு ''மை நேம் இஸ் ராகா (My Name Is RaGa)'' என்ற பெயரில் படமாக எடுக்கப்பட உள்ளது.
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு ''மை நேம் இஸ் ராகா (My Name Is RaGa)'' என்ற பெயரில் படமாக எடுக்கப்பட உள்ளது.
இன்னும் மூன்று மாதத்தில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக கட்சிகள் தயாராவது போலவே சினிமாத்துறையும் தயாராகி வருகிறது.
தேர்தலை மையமாக வைத்து, பாலிவுட், கோலிவுட் ஆகிய சினிமா துறையினர் நிறைய படம் வெளியிட இருக்கிறார்கள். அந்த வரிசையில்தான் தற்போது ராகுல் காந்தி இணைந்துள்ளார்.

பாஜக படம்
இப்படி படம் வெளியிடுவதில் மிக தீவிரமாக செயல்படுவது என்றால் அது பாஜகதான். சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி, யூரி - தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் படம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிரான தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் படம் ஆகியவை பாஜகவிற்கு ஆதரவாக எடுக்கப்பட்ட படங்கள் ஆகும். அதேபோல் இன்னொரு படமான தாக்கரே பாஜகவின் நண்பனான சிவ சேனா கட்சிக்கு ஆதரவாக எடுக்கப்பட்டது.

மோடி பற்றிய படம்
இந்த நிலையில்தான் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஓமங் குமார் இயக்கத்தில் ''பிஎம் நரேந்திர மோடி'' படம் எடுக்கப்பட உள்ளது. இதில் விவேக் ஓப்ராய் ஹீரோவாக நடிக்கிறார். தேர்தலுக்கு முன் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தி
தற்போது இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சேர்ந்து இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, ''மை நேம் இஸ் ராகா (My Name Is RaGa)'' என்ற படம் எடுக்கப்பட்டு வருகிறது. பிரபல இயக்குனர் பால் ரூபேஷ் இந்த படத்தை இயக்கி வருகிறார். இதுவும் லோக்சபா தேர்தலுக்கு முன் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

என்ன கருத்து
இதுகுறித்து கருத்து தெரிவித்த படத்தின் இயக்குனர், இந்த படம் பல தோல்விகளை சந்தித்த ஒருவரின் கதையாக இருக்கும். பல தோல்விகளை, தேவையில்லாத விமர்சனங்களை சந்தித்த நபர் அதில் இருந்து எப்படி மீண்டும் வந்தார். எப்படி தன்னை வெற்றியை நோக்கி நகர்த்திக் கொண்டார் என்பதாக இருக்கும். ஒரு தன்னம்பிக்கை படமாக இது இருக்கும்.

எப்படி இருக்கும்
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அதிக தோல்விகளை சந்தித்து இருந்தால், வெற்றியை நோக்கி செல்லும் உத்வேகத்தை இந்த படம் உங்களுக்கு அளிக்கும். இது ராகுலுக்கு எதிரான படமும் இல்லை, ஆதரவான படமும் இல்லை. இது உண்மைக்கு நெருக்கமான படம். அவ்வளவே, என்று கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications