டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணியா? நெவர்.. வேகவேகமாக மறுத்த ஷீலா தீட்சித்!

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.

டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக காலையில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் காங்கிரசின் டெல்லி ஆட்சியையும், அப்போதைய டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தையும் எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியை தொடங்கியவர்தான் அரவிந்த் கெஜ்ரிவால். தற்போது அதே காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி வைக்க இருப்பதாக கூறப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி உருவான போதே இது குறித்து விவாதம் செய்யப்பட்டது. ஆனால் ஆம் ஆத்மி- காங்கிரஸ் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை எதுவும் நடக்காமல் இருந்தது.

தூத்துக்குடியை கேட்டு இருக்கோம்.. பார்க்கலாம்.. கனிமொழிக்கு எதிராக களமிறங்கும் தமிழிசை?தூத்துக்குடியை கேட்டு இருக்கோம்.. பார்க்கலாம்.. கனிமொழிக்கு எதிராக களமிறங்கும் தமிழிசை?

காங்கிரஸ்

காங்கிரஸ்

காங்கிரஸ் பேச்சுவார்த்தையை நடத்தாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தது. இதனால் கோபம் அடைந்த அரவிந்த் கெஜ்ரிவால், நான் எவ்வளவோ முயன்றுவிட்டேன். ஆனால் காங்கிரஸ் கொஞ்சம் கூட இறங்கி வரவில்லை. இரண்டு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டால், பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் காங்கிரஸ் அதை புரிந்துகொள்ளாமல் இருக்கிறது, என்று புலம்பி இருந்தார்.

திருப்பம்

திருப்பம்

இந்த நிலையில்தான் ஆம் ஆத்மி- காங்கிரஸ் கட்சியினர் திடீர் திருப்பமாக தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டது. ஏற்கனவே இதற்கான மறைமுக பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. ஆம் ஆத்மி கூறியது சரிதான், கூட்டணி அமைத்து போட்டியிடுவதே சரியானது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி திடீர் என்று முடிவெடுத்து இருக்கிறார், என்றும் கூறப்பட்டது.

என்ன காரணம்

என்ன காரணம்

புல்வாமா தாக்குதல் அதை தொடர்ந்த ராணுவ தாக்குதல் காரணமாக பாஜகவிற்கு நாடு முழுக்க ஆதரவு கூடி இருக்கிறது. இதை சமாளிக்க எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்று கூடினால் மட்டுமே சரியாக இருக்கும். இதன் காரணமாகவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது இறங்கி வந்து கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளார் என்று செய்திகள் வெளியானது.

எத்தனை

எத்தனை

அதன்படி மொத்தம் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் காங்கிரஸ் மூன்றில் போட்டியிடும், ஆம் ஆத்மி 3 தொகுதிகளில் போட்டியிடும். மீதம் உள்ள 1 தொகுதியில் பாஜகவில் இருந்து வெளியேறிய, முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா அல்லது சந்துருகன் சின்கா நிற்க வைக்கப்படுவார் என்றனர்.

மறுப்பு தெரிவித்தார்

மறுப்பு தெரிவித்தார்

ஆனால் இந்த செய்திக்கு டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் மறுப்பு தெரிவித்துள்ளார். நாங்கள் ஆம் ஆத்மியுடன் பேசவில்லை. நாங்கள் தனித்து போட்டியிட போகிறோம். டெல்லியில் 7 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிபெறுவோம் என்று ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.

English summary
Rahul Gandhi Changes his mind: Congress starts its talk with Aam Aadmi Party in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X