எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம்: ராகுல் காந்தி ட்விட்டர் பயோவில் அதிரடி சேஞ்ச்..என்னன்னு பாருங்க
டெல்லி: அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி எம்.பி பதவி மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பறிக்கப்படுவதாக லோக்சபா செயலகம் அறிவித்தது. இந்த நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பயோவை 'Dis'Qualified MP" என மாற்றம் செய்துள்ளார்.
ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது நாடு முழுக்க பிரசாரம் செய்து வந்தார்.
அந்த வகையில், கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து பேசியது பெரும் சர்ச்சையானது.

2 ஆண்டு சிறை தண்டனை
ராகுலின் பேச்சு குறிப்பிட்ட ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கூறி அவருக்கு எதிராக குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 23-ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில், ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

எம்.பி பதவி பறிக்கப்பட்டது
இந்த தீர்ப்பு வந்த சூட்டோடு சூடாக மறுநாளிலேயே அதாவது 24-ந் தேதி ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் பறித்த லோக்சபா செயலகம் நடவடிக்கை எடுத்தது. காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய தலைவரும் நாடறிந்த அரசியல் தலைவருமான ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது மற்றும் மறுநாளே அவரது வயநாடு தொகுதி எம்.பி பதவி பறிக்கப்பட்டது நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது விவாதப்பொருளாகவும் ஆனது.

மோடி பயந்து விட்டார்
தனக்கு அவதூறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது மற்றும் எம்.பி பொறுப்பு பறிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்க டெல்லியில் நேற்று ராகுல் காந்தி பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினர். சுமார் அரைமணி நேரம் பத்திரிகையாளர்களிடம் பேசிய அதிரடியாக பேசினார். ராகுல் காந்தி கூறும் போது, அதானி விவகாரத்தில் எனது பேச்சால் பிரதமர் மோடி பயந்து விட்டார். எனது அடுத்த பேச்சை கேட்க அச்சப்பட்டு எனது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட
இந்திய மக்களின் ஜனநாயகத்தை பாதுகாக்கவே நான் இங்கே இருக்கிறேன். என்னை தகுதி நீக்கம் செய்வதாலோ, எந்தவித மிரட்டல்களாலோ, சிறையில் தள்ளுவதாலோ என்னை தடுக்க முடியாது. மன்னிப்பு கேட்க எனது பெயர் சாவர்க்கர் அல்ல. எனது பெயர் காந்தி. காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்பதில்லை"என்று ஆவேசமாக பேசினர். ராகுல் கந்தி தகுதி நீக்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் தரப்பில் இன்று போராட்டமும் நடைபெற்று வருகிறது. இதனிடையே ராகுல் காந்தி தனது ட்விட்டர் பயோவில், "Dis'Qualified MP" என்று மாற்றம் செய்துள்ளார். அதாவது தகுதி நீக்கம் செய்யப்பட்ட என்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பயோவை மாற்றியுள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications