Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"என்னங்க நியாயம்".. ராகுலுக்காக ஓடிவந்த ஜெர்மனி.. பின்னாடியே பாஜக.. இதென்ன கெட்ட பழக்கம்: ஜெய்சங்கர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் குறித்து கருத்து தெரிவித்தது மேற்கத்திய நாடுகளின் மிக மோசமான செயல்" என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில், ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை குறிப்பிட்டு அவர் பேசியிருந்தது மிகுந்த சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

திருடர்களின் பெயர்கள் எல்லாம் ஏன் மோடி என்றே முடிகிறது? என்று ராகுல் கேட்டதுதான், இந்த விவகாரம் முற்றியதற்கு அடிப்படை காரணமாக அமைந்தது.

 அதிர்ந்த கதர்கள்

அதிர்ந்த கதர்கள்

இதையடுத்து ராகுல் காந்திக்கு எதிராக சூரத் கோர்ட்டில், கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது... இந்த வழக்கை பாஜக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி என்பவர் தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருடம் சிறைத்தண்டனை விதித்தது... எனினும், ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்களுக்கு, ஜாமீன் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்தது. இதையடுத்து நாடாளுமன்ற மக்களவை செயலகம் தண்டனையை சுட்டிக்காட்டி ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறிப்பதாக அறிவித்தது.. இதனால், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் கடுமையான அதிர்ச்சியை அடைந்தனர்.. உடனடியாக கண்டன பதிவுகளையும் பதிவு செய்தனர்..

 அதானி

அதானி

அப்போது முதல், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை கையில் எடுத்து, அதை நடத்தியும் வருகின்றனர். சமீபகாலமாகவே, பிரதமர் மோடி மற்றும் அதானி தொடர்பு குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார் ராகுல்காந்தி.. நாடாளுமன்றத்திலும் இது குறித்த பிரச்சனையை எழுப்பிய அவர், அதானிக்கு சொந்தமான ஷெல் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட பணம் குறித்தும் கடுமையான கேள்விகளை எழுப்பினார். இதனை நாடாளுமன்றத்தில் மறுபடியும் பேசவும் ராகுல்காந்தி திட்டமிட்டிருந்த நிலையில்தான், பழிவாங்கும் நடவடிக்கையாக, இந்த அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்டு எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

சீமான்

சீமான்

அத்துடன், காங்கிரசுக்கு எதிரான மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ், அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட சீமான் வரை, ராகுல் காந்திக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த தகுதி நீக்க விவகாரத்தில் பாஜகவையும் கடுமையாக சாடியிருந்தனர். ஆனால், ராகுல் செய்தது தவறு என்று பாஜக தரப்பு தொடர்ந்து சொல்லி வருகிறது.. உள்துறை அமைச்சர் அமித்ஷா இதை பற்றி சொல்லும்போது, ராகுல்காந்தி தண்டிக்கப்பட்டது முழுக்க முழுக்க நீதிமன்ற நடவடிக்கையே, இந்த வழக்கில் இருந்து அவர் நிவாரணம் பெற கோர்ட்டை நாட வேண்டுமே தவிர பிரதமர் மோடியை குற்றம்சாட்டுவதில் எந்த பலனும் இல்லை என்று கூறியிருந்தார்.

 அப்பீல் ராகுல்

அப்பீல் ராகுல்

எனினும் இந்த விவகாரத்தில், வெளிநாடுகளும், ராகுல் காந்திக்கு ஆதரவுகளை தர துவங்கியது.. அந்தவகையில் ஜெர்மனியும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, கருத்து தெரிவித்தது. "இந்திய எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு எதிராக வந்துள்ள நீதிமன்ற தீர்ப்பு, நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து அறிவோம். எங்களுக்கு தெரிந்தவரை, தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் நிலையில் ராகுல் காந்தி இருக்கிறார். இந்த தீர்ப்பு நிலைத்திருக்குமா என்பதும், தகுதி நீக்கம் செய்வதற்கு ஏதேனும் அடிப்படை உள்ளதா என்பதும் பிறகுதான் தெளிவாக தெரியவரும். நீதித்துறை சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளின் தரநிலைகள் இந்த வழக்கில் பொருந்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றது.

 டாமினேஷன்

டாமினேஷன்

ஜெர்மனி இவ்வாறு கருத்து சொன்னதுமே, இதற்கு பாஜக தரப்பு உடனடியாக ரியாக்ட் செய்தது.. இதுகுறித்து, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அந்நிய நாட்டின் தலையீட்டிகு அழைப்பு விடுத்த ராகுல் காந்திக்கு நன்றி என்று விமர்சித்திருந்தார்.. வெளிநாட்டு தலையீட்டின் மூலம் இந்தியாவின் நீதித்துறையை ஆதிக்கம் செலுத்த முடியாது என்றும், எந்த ஒரு அந்நிய ஆதிக்கத்தையும் இந்தியா சகித்துக் கொள்ளாது என்றும், ஏனென்றால் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி" என்றும் பதிலடி தந்திருந்தார்.

 நச் பதிலடி

நச் பதிலடி

இதை பார்த்ததுமே, காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் துறை தலைவர் பவன் கேரா, "ரிஜிஜூ அவர்களே... நீங்கள் ஏன் பிரதான பிரச்சினையில் இருந்து திசை மாறுகிறீர்கள்? ராகுல் காந்தியின் கேள்வி அதானி பற்றியது... நீங்கள் முதலில் அதற்கு பதில் சொல்லுங்கள். அதை விட்டுட்டு, மக்களை திசை திருப்பாதீர்கள்" என்று காட்டமாக ட்வீட் செய்திருந்தார்.. இப்படியான விவாதங்களும், கருத்தக்களும் மாறி மாறி இணையத்தில் வலம்வந்து கொண்டிருந்தாலும், ராகுல் காந்தி தகுதி இழப்பு விவகாரத்தில் கருத்து சொன்ன முதல் நாடாக ஜெர்மனி இருக்கிறது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது. அத்துடன், ஜெர்மனி சொன்ன அந்த கருத்து இப்போது உள்நாட்டில் விவாதப் பொருளாவும் மாறி உள்ளது.

 செம்ம டென்ஷன்

செம்ம டென்ஷன்

இப்படிப்பட்ட சூழலில்தான், இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் விமர்சனம் செய்துள்ளார்.. பெங்களூருவில் பேசிய அவர், மேற்குலகில் நீண்ட காலமாகவே, பிறரை பற்றி கருத்து சொல்லும் தீய பழக்கம் இருந்து வருகிறது.. மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது தங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் என்று மேற்கத்திய நாடுகள் நினைத்து கொண்டிருக்கின்றன என்று காட்டமாக கூறியுள்ளார்.. இதற்கு காங்கிரஸ் தரப்பு என்ன பதிலடி தரப்போகிறதோ தெரியவில்லை.. இன்றைய தினம், அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 வருட ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி, சூரத் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+