காதலி குறித்து முதல் முறையாக மனம் திறந்த ராகுல் காந்தி.. ஆனா அடுத்து சொன்ன வார்த்தை.. கவனிச்சீங்களா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தனது தாயார் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தனது பெர்சனல் வாழ்க்கை குறித்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார். கேம்பிரிட்ஜில் படித்தபோது தனது காதலியுடன் பெற்றோர் முதன்முதலில் சந்தித்த உணவகத்திற்கு சென்றதாக ராகுல் காந்தி கூறினார். அதேநேரம் அப்போது காதலியாக இருந்த பெண் இப்போது தனது தோழியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று திங்கள்கிழமை காங்கிரஸின் மூத்த தலைவரான சோனியா காந்தி எழுதிய 'Belonging: A Journey of Love' என்ற சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்தியா கூட்டணியை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

Rahul Gandhi Love Story Rahul Gandhi Sonia Gandhi

ராகுல் காந்தி

அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். குறிப்பாக தனது பெர்சனல் வாழ்க்கை தொடர்பாக சில கருத்துகளையும் அவர் கூறினார்.

ராகுல் காந்தியின் பெற்றோரான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும், சோனியா காந்தியும் கேம்பிரிட்ஜில் மாணவர்களாக படித்து கொண்டு இருந்தபோது அங்குள்ள 'Varsity Restaurant' என்ற உணவகத்தில்தான் முதன்முதலில் சந்தித்துள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் கேம்பிரிட்ஜ் சென்றிருந்தபோது, தனது காதலியையும் அழைத்துக்கொண்டு அதே உணவகத்திற்கு செல்ல விரும்பியதாக ராகுல் காந்தி கூறினார்.

காதலி

இது குறித்து அவர் பேசுகையில், "எனது பெற்றோரை பற்றி நிறைய கதைகள் இருந்தன. அதில் முக்கியமான ஒன்று அவர்கள் Varsity Restaurantல் சந்தித்து கொண்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு நான் கேம்பிரிட்ஜில் இருந்தபோது, எனது காதலியிடம் அந்த உணவகத்திற்குச் செல்லலாம் என்று கூறினேன். எனது பெற்றோர் சந்தித்த இடத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அங்கு சென்று அமர்ந்தோம். உணவக ஊழியர் மெனுவை கொண்டு வந்தபோது, எனது பெற்றோர் இந்த உணவகத்தில்தான் சந்தித்து கொண்டார்கள் என்று அவரிடம் கூறினேன்" என்று அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

இப்போது தோழி மட்டுமே!

ராகுல் காந்தி தனது பேச்சில் காதலி என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து நிகழ்ச்சியில் அந்த பெண் யார்.. அவரது பெயர் என்ன கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "அவர் இப்போது எனது தோழி மட்டுமே" என்று சிரித்து கொண்டே கூறினார். அதாவது ராகுல் காந்தி அப்போது காதலித்து வந்த பெண்ணுடன் பிரேக் அப் ஆகிவிட்டது.

உடல்நிலை

இதற்கிடையே தனது தாயார் சோனியா காந்தியின் உடல்நல போராட்டங்கள் குறித்தும் ராகுல் காந்தி முக்கியமான தகவலை பகிர்ந்து கொண்டார். தனது புத்தகத்தில் சோனியா காந்தி இதை மிகவும் குறைத்தே குறிப்பிட்டுள்ளதாகவும், அவர் நான்கு முறை கேன்சரில் இருந்து மீண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து ராகுல் காந்தி பேசுகையில், "இந்த புத்தகத்தில் நீங்கள் படிப்பது அப்பா (ராஜிவ் காந்தி) இறப்பதற்கு முன்பிருந்த எனது அம்மாவை (சோனியா காந்தி) பற்றியது. அவர் மூன்று முறை புற்றுநோயிலிருந்து மீண்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் உண்மையில் அவர் நான்கு முறை புற்றுநோயை வென்றவர். தனது போராட்டங்களை அவர் எப்போதும் குறைத்தே சொல்லியிருக்கிறார். எனது வாழ்நாளில் ஒருமுறைகூட அவர் பயந்ததை நான் பார்த்ததில்லை. ஒருமுறைகூட அவர் பின்வாங்கியதில்லை" என்றார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+