தேர்தல் ஆணையத்தால் 'இறந்தவர்கள்' என அறிவிக்கப்பட்ட மக்களுடன்.. தேநீர் அருந்திய ராகுல் காந்தி!
டெல்லி: பீகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் 65 லட்சம் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியிருக்கிறது. இதில் சில லட்சம் பேர் உயிரிழந்தவர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்கள் என்று சொல்லப்பட்டவர்ளுடன் ராகுல் காந்தி தேநீர் அருந்தியிருக்கிறார். இது தொடர்பான வீடியோவை தனது x பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
தனது எக்ஸ் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, "வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன, ஆனால், 'இறந்தவர்களுடன்' தேநீர் அருந்தும் வாய்ப்பு ஒருபோதும் கிடைத்தது இல்லை. இந்த அரிய அனுபவத்திற்காக, தேர்தல் ஆணையத்திற்கு நன்றி" என்று கூறியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. இதில் சுமார் 65 லட்சம் பெயர்கள் விடுபட்டிருந்தன. உயிரிழந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்கள், போலி முகவரியில் இருந்தவர்கள்தான் இந்த 65 லட்சம் பேர் என தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது. ஆனால், விடுபட்ட 65 லட்சம் பேரின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், அப்படி எல்லாம் கொடுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
जीवन में बहुत दिलचस्प अनुभव हुए हैं,
— Rahul Gandhi (@RahulGandhi) August 13, 2025
लेकिन कभी 'मृत लोगों' के साथ चाय पीने का मौका नहीं मिला था।
इस अनोखे अनुभव के लिए, धन्यवाद चुनाव आयोग! pic.twitter.com/Rh9izqIFsD
பீகாரில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. திருத்த நடவடிக்கை பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆதார், ரேஷன் அட்டையை அடையாளமாக ஏற்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்த பிரச்சனை அதிகமாக எழுந்தது. இந்நிலையில் ராகுல் காந்தியின் சோஷியல் மீடியா போஸ்ட் கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications