இறுக்கம்.. மாயமான சிரிப்பு.. 100% மாற்றம்.. இதுதான் ராகுலின் 2.0 அவதாரமா? பிரஸ்மீட்டை கவனிச்சீங்களா!
டெல்லி: ராகுல் காந்தி இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் ராகுல் காந்தி மிகவும் இறுக்கமாக இருந்தார். கொஞ்சம் கூட புன்னகை செய்யாத ராகுல் முந்தைய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இருந்ததை விட அவர் தற்போது 100 சதவீதம் மாறி இருந்தார். காட்டமாகவும், ஆக்ரோஷமாகவும் அவர் பல விஷயங்களை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ராகுலின் இந்த மாற்றத்தால் பிரஸ்மீட்டில் நடந்த பரபரப்பான சம்பவங்கள் வருமாறு:
ராகுல்காந்தி கடந்த 2019ல் கர்நாடகா மாநிலம் கோலாரில் ‛மோடி' பெயர் குறித்து பேசியது பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இந்நிலையில் தான் வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு நாளையொட்டி ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

2 ஆண்டு சிறை
அப்போது மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தியை குற்றவாளி என சூரத் நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும் மேல்முறையீடு செய்ய வசதியாக 30 நாள் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் அந்த தீர்ப்பை நிறுத்தி வைத்தது. இருப்பினும் 2 ஆண்டு சிறை தண்டனையால் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்ற தகவல் வெளியானது.

ராகுல் காந்தி தகுதி நீக்கம்
பாஜகவினரும் ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அடுத்த 24 மணிநேரத்துக்குள் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இதனை காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் ராகுல் காந்தியை எதிர்கொள்ள பாஜக பயப்படுவதால் தான் அவரை தகுதி நீக்கம் செய்துள்ளதாக விமர்சனம் செய்துள்ளனர்.

பத்திரிகையாளர் சந்திப்பு
இந்நிலையில் தான் டெல்லியில் இன்று ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். பொதுவாக ராகுல் காந்தியின் பத்திரிகையாளர் சந்திப்பு என்பது அமைதியான முறையில் நடக்கும். ராகுல் காந்தியும் சிரித்த முகத்துடன் பேட்டி அளிக்க தொடங்குவார். மேலும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அவ்வப்போது புன்முறுவலுடன் ராகுல் காந்தி பதிலளிப்பார். பெரும்பாலும் ராகுல் காந்தி யாரையும் கடிந்து கூட பேசமாட்டார். சர்ச்சைக்குரிய வகையில் கேள்விகள் கேட்டாலும் கூட அதனை திறமையாக கையாண்டு பதிலளிப்பதை ராகுல் காந்தி வழக்கமாக கொண்டுள்ளார்.

கொஞ்சம் கூட புன்னகை இல்லை
ஆனால் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் காந்தி மிகவும் இறுக்கமாக காணப்பட்டார். அவரது முகத்தில் கொஞ்சம் கூட புன்னகை இல்லை. பேட்டியின் துவக்கம் முதல் இறுதி வரை ராகுல் காந்தி மிகவும் இறுக்கமாக காணப்பட்டார். அதானி விவகாரம் மற்றும் அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் இடையேயான உறவு குறித்து அவர் வழக்கத்தை விட சற்று குரலை உயர்த்தி காட்டமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

100 சதவீதம் மாறிய ராகுல்
இதனால் இந்த பிரஸ்மீட் முற்றிலும் வித்தியாசமான முறையில் பரபரப்பாக இருந்தது. 100 சதவீதம் ராகுல் காந்தி தனது இயல்பு நிலையில் இருந்து மாறி இருந்ததை அனைவராலும் பார்க்க முடிந்தது. அதாவது சாந்தமாக, சிரித்து பேசும் ராகுல் தனது நியைில் இருந்து முற்றிலும் மாறி இருந்தார். இதனை நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர். அதாவது சாதுவான ராகுல் தகுதி நீக்கத்தால் 2.0 அவதாரம் எடுத்திருப்பதாக அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

பத்திரிகையாளரை சீண்டிய ராகுல்
மேலும் தகுதி நீக்கம் பற்றியும், ஓபிசி பிரிவு மக்களை அவமதித்ததாக பாஜகவினர் குற்றம்சாட்டுவது குறித்தும் ராகுல் காந்தியிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது ராகுல் காந்தி கோபமாக ‛‛ஏன் பாஜகவுக்கு நேரடியாக வேலை செய்கிறீர்கள். பத்திரிகையாளர் போல் நடிக்க வேண்டாம்'' என காட்டமாக பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications