நக்கல்ணா உனக்கு.. பேட்டியளித்த மத்திய அமைச்சர்களின் பின்னால் போய் ராகுல் செய்த செயல்! வைரல் வீடியோ
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் சென்று ராகுல் காந்தி செய்த செயல் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி அதிக கவனம் பெற்றுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28 ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரெளபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் உரையாற்றினர். அதன்பிறகு மத்திய பட்ஜெட் கடந்த 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. தற்போது பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி நடந்து வருகிறது. இன்றும் லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்பிக்கள் பங்கேற்று பேசினர்.
மத்திய அமைச்சர்கள் பேட்டி
இன்று நாடாளுமன்ற சபை நடவடிக்கை முடிவடைந்தது. அதன்பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
பின்னால் வந்த ராகுல் காந்தி
இந்த வேளையில் ராகுல் காந்தி அங்கு நடந்து வந்தார். மத்திய அமைச்சர்கள் இருவரும் பேட்டியளித்து கொண்டிருந்தபோது அவர்களுக்கு பின்னால் ராகுல் காந்தி வந்தார். பத்திரிகையாளர்களை ராகுல் காந்தி நெருங்கியதும் மத்திய அமைச்சர்கள் விலகி சென்றனர்.
ஜாலியாக சொன்ன வார்த்தை
இதையடுத்து ராகுல் காந்தி ஜாலியாக, ‛‛வாருங்கள்.. நாம் அனைவரும் ஒன்றாக நிற்போம். ஒன்றாக பேட்டிக்கொடுப்போம்'' என்று கூறினார். ஆனால், அவர்கள் விலகி சென்றனர். இந்த வேளையில், ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் கையை பிடித்து இழுத்தார்.
ஆனால் பிரகலாத் ஜோஷி, ராகுல் காந்தியை விட்டு விலகி சென்றார். இதனை அங்கிருந்த பிரியங்கா காந்தி சிரித்தபடி பார்த்து கொண்டிருந்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
#WATCH | "Come, let's stand together. Let's do it together,' says LoP, Lok Sabha, Rahul Gandhi, to Union Ministers Pralhad Joshi and Ashwini Vaishnaw as he approaches the media stand in Parliament premises, where the Union Ministers were already present. pic.twitter.com/susfZ9ZeeW
— ANI (@ANI) February 11, 2026
நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோவுக்கு தற்போது கலவையான கருத்துகளை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். ஒரு தரப்பினர், ‛‛ராகுல் காந்தியின் இந்த நகைச்சுவையை யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்’’ என்று கூறி வருகின்றனர்.
அதேவேளையில் இன்னொரு தரப்போ, ‛‛மத்திய அமைச்சர்கள் பேட்டியளிக்கும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியவில்லை. பள்ளி மாணவன் போல் டிஸ்டர்ப் செய்துள்ளார்’’ என்று விமர்சனம் செய்துள்ளனர். இப்படியாக இந்த வீடியோ டிரெண்ட்டாகி வருகிறது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications