பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது – ராகுல்காந்தி ட்விட்டரில் கருத்து
டெல்லி: லக்கீம்பூர் விவசாயிகள் போராட்டத்தின் போது கூட்டத்திற்குள் காரை ஏற்றி விவசாயிகள் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்,
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி கடந்த அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர் . முன்னதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிக் மீரா பயணித்த கார் கூட்டத்திற்குள் மோதியதில் விவசாயிகள் இறந்ததாகவும் இதுவே பின்னர் வன்முறையாக மாறியது.
இந்த விவகாரம் தொடர்பாக தாமக முன்வந்து விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம் சம்பவம் குறித்து மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும், குற்றவாளிகளை கைது செய்து விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது

காவல்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, லக்கிம்பூர் வன்முறை குறித்த விசாரணையை உத்தரப்பிரதேச காவல்துறை மிக மெத்தனமாக நடத்துவதாக உச்ச நீதிமன்றம் குற்றம் சாட்டி நிலையில், விசாரணை அறிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை எனவும் லக்கிம்பூர் விவகாரத்தில் காவல்துறை விசாரணையை ஏன் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு கண்காணிக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

சிறப்பு விசாரணை குழு
மேலும் லக்கிம்பூர் விவசாயிகள் கார் மோதிய சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிறப்பு விசாரணை குழுவினர் விவசாயிகள் காவல்துறையினர் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து அறிக்கை பெற்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம் விவசாயிகளை கொல்லத் திட்டமிட்ட சதி என சிறப்பு விசாரணை குழு தெரிவித்துள்ளது..

கொலை முயற்சி வழக்கு
விவசாயிகள் போராட்டத்தின் போது கார் ஓட்டியதாக கூறப்படும் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட மேலும் பல புகார்களை பதிவு செய்ய வேண்டும் எனவும், ஆசிஸ் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் மாற்றியமைத்து புதிய வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் எனவும் சிறப்பு விசாரணை குழுவினர் நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ராகுல் காந்தி கருத்து
இந்தியா முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய லக்கிம்பூர் சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை குழுவின் தகவலை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார் . மேலும் வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய மத்திய அமைச்சரை அமைச்சரைவில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், உண்மை உங்களுக்கு முன்னால் உள்ளது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்
-
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications