ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம்.. போலீஸ் தடுப்புகளை எகிறி குதித்து தாண்டி சென்ற ராகுல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி இந்தியா கூட்டணி எம்பிக்கள் டெல்லியில் பேரணி நடத்தினர். தேர்தல் ஆணையர் அலுவலகம் நோக்கி சென்ற இந்தியா கூட்ட்ணி எம்பிக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட எம்பிக்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறிது நேரம் கழித்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சக தேர்தல் ஆணையர்களே அவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த விவாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

Rahul Gandhi Priyanka Gandhi Delhi protest

தடுப்புகளை தாண்டி குதித்த ராகுல் காந்தி

ஞானேஷ் குமார் பதவி விலக வலியுத்தி இன்று தலைநகர் டெல்லியில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் பேரணியாக சென்றனர். நாடாமளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்பட இந்தியா கூட்டணி எம்பிக்கள் சென்றனர். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற பேனர்களை ஏந்தியபடி பேரணியாக எம்பிக்கள் சென்றனர்.

ராகுல் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்ற நிலையில் போலீசார் சாலைகளில் தடுப்புகளை வைத்து மறித்து இருந்தனர். இந்த தடுப்புகளை தாண்டி குதித்து ராகுல் காந்தி சென்றார். தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கோஷமிட்டு ஆர்ப்பாட்டம்

பேரணிக்கு அனுமதி பெறப்படாததால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து காங்கிரஸ் எம்.பி.க்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சிறிது நேரம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். தேர்தல் ஆணையம் நோக்கி செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால், தொடர்ந்து டெல்லியில் உள்ள ஆகாஷ்வாணி பவனுக்குள் செல்ல ராகுல் காந்தி , பிரியங்கா உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் முயன்றனர். இதனால், டெல்லியில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

தற்போது, அகில இந்திய வானொலி அலுவலகத்துக்குள் (ஆகாஷ்வானி பவன்) நுழைந்த ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா, வளாகத்திற்குள்ளேயே அமர்ந்துள்ளனர். ஞானேஷ் குமாருக்கு எதிராக ராகுல், பிரியங்கா தங்களது ஆதரவாளர்களுடன் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக ஆம் ஆத்மி பங்கேற்கவில்லை

திமுக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்தியா கூட்டணி எம்பிக்களின் போராட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக எம்பி துரை வைகோ, சிபிஎம் சு வெங்கடேசன் எம்பி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறினார். சு வெங்கடேசன் கூறுகையில், மத்திய அரசு அடக்குமுறையை கையாள்கிறது, எம்பிக்களாகிய எங்களுக்கு நாட்டில் போராட அனுமதி இல்லை. சாதாரண மக்கள் என்ன செய்ய முடியும்? என்று கூறினார்.

போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், காங்கிரஸ் எம்.பி.க்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் சிறிது நேரம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். தேர்தல் ஆணையம் நோக்கி செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால், தொடர்ந்து டெல்லியில் உள்ள ஆகாஷ்வாணி பவனுக்குள் செல்ல ராகுல் காந்தி , பிரியங்காஉள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் முயன்றனர். இதனால், டெல்லியில் இன்று காலை முதலே பரபரப்பாக காணப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+