ஹரியானாவில் ஒரே வீட்டில் 500 வாக்காளர்கள்! இதுதான் ஓட்டு திருட்டு! புட்டு புட்டு வைத்த ராகுல் காந்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வாக்கு திருட்டு குறித்து தொடர்ந்து தேர்தல் ஆணையத்தையும், பாஜகவையும் விமர்சித்து வரும் ராகுல் காந்தி, ஹரியானாவில் சுமார் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக 500 வாக்காளர்களுக்கு ஒரே வீட்டின் முகவரி இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, "ஹரியானாவில் வாக்கு திருட்டு பெரிய அளவில் நடந்திருக்கிறது. சுமார் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டிருக்கிறது. இதில் 5.21 லட்சம் போலியானவை, 93,174 செல்லாதவை, 19.26 லட்சம் வாக்குகள் பல்க் வாக்காளர்கள். அதாவது ஒரே வீட்டில் 500 வாக்காளர்கள் இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, ஒருவர் கூட இல்லை. இதைதான் பல்க் வாக்காளர்கள் என்று கூறுகிறோம்.

Rahul Gandhi Haryana

ஹரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்

ஹரியானாவில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடி. இதில் 25 லட்சம் போலி வாக்குகள் இருக்கின்றன. அப்படியெனில் ஹரியானவில் ஒவ்வொரு 8 பேருக்கு ஒரு போலி ஓட்டு இருக்கிறது என்று அர்த்தம். இந்த வாக்கு திருட்டுகள் தனிப்பட்ட தொகுதிகளில் நடப்பதில்லை. மாறாக மாநில அளவில் தேசிய அளவில் நடப்பதாக நாங்கள் சந்தேகித்தோம்" என்று கூறியிருக்கிறார்.

வாக்கு திருட்டு குறித்த ஹைட்ரஜன் குண்டு ஒன்று விரைவில் போடப்படும் என்று காங்கிரஸ் கூறியிருந்த நிலையில், இன்று ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் ஆதாரங்கள் அதிர்வலையை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. H பைல்ஸ் என்கிற பெயரில் இந்த ஆதாரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

ராகுல் காந்தி வீசிய ஹைட்ரஜன் குண்டு

ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் மேலும் பேசுகையில், "எங்களிடம் 'H' கோப்புகள் உள்ளன. இது ஒரு மாநிலமே எப்படித் திருடப்பட்டுள்ளது என்பது பற்றியது. இது தனிப்பட்ட தொகுதிகளில் நடக்கவில்லை, மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடப்பதாக நாங்கள் சந்தேகித்தோம். எங்கள் கட்சியின் வேட்பாளர்களிடமிருந்து ஏதோ தவறு நடப்பதாக புகார் வந்தது. தேர்தல் முடிவுகள் பற்றிய எங்களுடைய கணிப்புகள் அனைத்தும் தலைகீழாக மாறியிருந்தது.

ஜென் Z தலைமுறையினர் உஷார்

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இதை நாங்கள் இதனை எதிர்கொண்டோம். முதலில் அரியானாவில் என்ன நடந்தது என்பதைப் பற்றி ஆராய முடிவு செய்தோம். தற்போது உண்மை வெளிவந்திருக்கிறது. இந்தியாவின் இளைஞர்கள், 'ஜென் Z' தலைமுறையினர் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இது உங்கள் எதிர்காலத்தைப் பற்றியது. நான் தேர்தல் ஆணையத்தையும், இந்தியாவின் ஜனநாயக செயல்முறையையும் கேள்வி கேட்கிறேன். கேள்வி எழுப்ப எங்களிடம் 100% ஆதாரம் இருக்கிறது.

போலி வாக்காளர்கள்

ஹரியானாவில் அனைத்து எக்ஸிட் போல் முடிவுகளும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றுதான் கணித்திருந்தன. ஆனால், காங்கிரஸின் வெற்றியை தோல்வியாக மாற்ற திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. நாங்கள் அளித்த ஆதாரங்களின்படி, பிரேசில் நாட்டை சேர்ந்த மாடல் ஒருவர், 10 வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் சுமார் 22 முறை வாக்களித்திருக்கிறார். சீமா, ஸ்வீட்டி, சரஸ்வதி, ரஷ்மி, வில்மா போன்ற பெயர்களில் இந்த பெண்ணின் புகைப்படம் இருக்கிறது.

இதைவிட முக்கியமான விஷயம் என்னவெனில், 2024 மக்களவை தேர்தலுக்கு பின்னர் மூன்று மாதங்கள் கழித்து ஹரியானா சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் மக்களவை தேர்தலுக்கு பிறகு, சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் 3.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைத்தும் காங்கிரஸ் வாக்காளர்கள். மக்களவை தேர்தலில் ஹரியானாவில் 5 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றது. எனவே சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+