Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகுல் காந்தியின் இந்து, இந்து ராஜ்ஜியம் பேச்சு... பாஜகவை எதிர்கொள்ள காங். வியூகம் கை கொடுக்குமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்து-இந்துத்துவா குறித்து நேற்று ஆவேசமாக பேசியிருப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாௐஅ தேர்தல் அரசியல் களத்தில் பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளை தனித்தே அறுவடை செய்து வந்த பாஜகவுக்கு நெருக்கடி தரும் வகையில் காங்கிரஸும் அதே குரலில் பேச தொடங்கி இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

2014 லோக்சபா தேர்தல் தொடங்கி கடந்த 7 ஆண்டுகாலம் காங்கிரஸுக்கு ஆகப் பெரும் தோல்வி காலம்தான். நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

காங்கிரஸ் கட்சியின் ஆணிவேராக இருந்த சிறுபான்மையினர் வாக்குகளை பல்வேறு மதச்சார்பற்ற கட்சிகள் பிரித்து கொள்கின்றன. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகள் கிடைப்பது இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் நிலை மிகவும் பரிதாபமான நிலையில்தான் இருக்கிறது.

உ.பி. தேர்தல் களத்தில் காங்.

உ.பி. தேர்தல் களத்தில் காங்.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் மிக முக்கியமானது. தற்போதைய நிலையில் உ.பி.யில் காங்கிரஸ் கட்சிக்கு 4-வது இடம்தான். பாஜக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிக்கு அடுத்ததாகத்தான் காங்கிரஸ் பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியான பாஜகவுக்கு எதிரான மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து வலிமையான கூட்டணியை உருவாக்கி இருக்க வேண்டும். அதை செய்வதற்கு காங்கிரஸ் மேலிடத்தில் திடமான முடிவுகளை எடுக்கும் தலைமையும் இல்லை. 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்ய முடியாத பரிதாபத்தில் இருக்கிறது காங்கிரஸ்.

ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி

ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி

அத்துடன் இதுவரை இல்லாத வகையில், சிறுபான்மை முஸ்லிம்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்காக ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியும் மாநிலங்களில் கோதாவில் குதிக்கிறது. கேரளாவைப் பொறுத்தவரையில் இடதுசாரிகள், காங்கிரஸ் என்கிற இரு துருவ அரசியல்தான். பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளை குறித்து பாஜக கையில் எடுத்த வியூகங்கள் கேரளாவில் கை கொடுக்கவில்லை. இப்போது ஊசலாட்டத்தில் இருக்கும் சிறுபான்மை கிறிஸ்தவர்களின் வாக்குகளுக்கு குறிவைக்கிறது. கிறிஸ்தவர்களிடையேயான பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசு, மத்தியஸ்தம் செய்வதில் ஆர்வமாக இருக்கிறது. அண்மையில் வாடிகனில் போப்பாண்டவரை பிரதமர் மோடி சந்தித்து பேசியதும் கூட இந்த அஜெண்டாவின் ஒரு பகுதியாகத்தான் இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

மிதவாந்த இந்துத்துவா?

மிதவாந்த இந்துத்துவா?

இப்படி நாலா திசையிலும் காங்கிரஸ் கட்சியானது ரேஸிலேயே இல்லை என்கிற துயரச் சந்திக்கு துரத்தி விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் வேறுவழியே இல்லாமல் இப்போது பாஜகவின் பாதையிலேயே பயணித்து அக்கட்சியை எதிர்கொள்வது என வியூகம் வகுத்திருக்கிறது காங்கிரஸ் என்பதைத்தான் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ராகுல் காந்தி பேசிய பேச்சு வெளிப்படுத்துகிறது. காங்கிரஸைப் பொறுத்தவரை ஒரு மிதவாத இந்துத்துவா போக்கை கடைபிடிக்கிறது என்கிற விமர்சனம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆனால் தீவிர இந்துத்துவாவை பாஜக பேசியதால் காங்கிரஸின் மிதவாத இந்துத்துவா வியூகம் காணாமலேயே போயிருந்தது. இப்போது அதே பாலிசியை ராகுல் காந்தி தூசு தட்டி பேசத் தொடங்கி இருக்கிறார்.

மதவாத அரசியலும் காங்கிரஸும்

மதவாத அரசியலும் காங்கிரஸும்

தங்களை சாதரண இந்துவாகவும் பாஜகவை இந்துத்துவவாதிகளாகவும் வேறுபடுத்தி பேசுகிறார் ராகுல் காந்தி. இதற்கு உதாரணமாக மகாத்மா காந்தி ஒரு இந்து, நாதுராம் கோட்சே ஒரு இந்துத்துவவாதி எனவும் கோடிட்டுக்காட்டுகிறார் ராகுல் காந்தி. மதச்சார்பின்மையை தெள்ளத் தெளிவாக வலியுறுத்தி ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் இந்துத்துவா கோட்பாடுகளுக்கு எதிராக கர்ஜித்துக் கொண்டிருந்த அதே ராகுல்காந்திதான் இப்போது இந்து, இந்து ராஜ்ஜியம் என்றெல்லாம் பேசுவதில் தீவிரமாக இருக்கிறார். அதாவது பாஜக பக்கம், பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகள் இடைவிடாமல் ஒவ்வொரு தேர்தலிலும் சாய்ந்து கொண்டிருப்பதை சற்றேனும் தடுக்க முடியுமா? என்கிற ஒரு முயற்சியை ராகுல் மேற்கொண்டிருக்கிறார். ஆனால் மதத்தை அரசியலில் கலக்கும் பாஜக பாணியை காங்கிரஸும் கையில் எடுப்பது என்பது அக்கட்சிக்கு எஞ்சியிருக்கும் சிறுபான்மை ஆதரவை முற்றாக தூக்கி தூர எறிகிற விபரீதமாகத்தான் இருக்கும். ஆகையால் தெளிவான தலைமையும் கோட்பாடும் வியூகமும் இல்லாமல் காங்கிரஸ் கட்சி இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் பயணிப்பது நிச்சயம் தேர்தல் களத்தில் எந்தவிதத்திலுமே கை கொடுக்க வாய்ப்பில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+