மோடி பார்வையில்... மக்கள் தேசவிரோதிகள்... பெரு முதலாளிகள் நண்பர்கள்... பொங்கி எழுந்த ராகுல் காந்தி!
டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களை எதிரியாக கருதும் பிரதமர் மோடி பெரு முதலாளிகளின் நண்பர்களாக விளங்குகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
அரசை விமர்ச்சிக்கும் மாணவர்கள் தேச விரோதிகள், மக்கள் நக்சல்கள் என மத்திய அரசு கருதுவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் இருபது நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.விவசாயிகள் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் மத்திய அரசு அதற்கு மறுத்து வருகிறது. இதனால் மத்திய அரசு-விவசாயிகள் இடையிலான பலகட்ட போராட்டம் தோல்வியில் முடிந்துளளது.
இந்த நிலையில் விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்க்க மறுக்கும் பிரதமர், பெரு முதலாளிகளுக்கு நண்பராக விளங்குவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.இது குறித்து டுவிட்டரில் அவர் கூறியதாவது:-
மத்திய மோடி அரசை பொறுத்தவரையில் மத்திய அரசு மீது கருத்து வேறுபாடு கொண்ட மாணவர்கள் அனைவரும் தேச விரோதிகள், நாட்டின் மக்கள் அனைவரும் நகர்ப்புற நக்சல்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் கொரோனா தொற்றை பரப்புபவர்கள், போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் காலிஸ்தானியர்கள், இந்தியா நாட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் யாரும் இல்லை, ஆனால் அதே நேரத்தில் பெரு வணிக முதலாளிகள் அனைவரும் பிரதமர் மோடியின் நண்பர்கள் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.












Click it and Unblock the Notifications