Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பாஜக கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு, ஆனால்.." கடைசியில் பெரிய ட்விஸ்ட் வைத்த ராகுல்.. பரபர

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா சபாநாயகரைப் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்வதில் மத்திய பாஜக அரசு முயன்று வருகிறது. இதற்கிடையே பாஜக கூட்டணி சபாநாயகர் பதவிக்கு நிறுத்தும் வேட்பாளருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்கும்.. ஆனால் துணைச் சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில், 18-வது லோக்சபா கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஜூலை 3-ந் தேதி வரை இந்தக் கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், இதில் புதிய எம்பிக்கள் பதவியேற்க உள்ளனர். எம்பிக்கள் பதவியேற்பு இன்றுடன் முடிவடைகிறது.

Rahul Gandhi lok sabha

சபாநாயகர் தேர்தல்: இதனையடுத்து நாளை லோக்சபா சபாநாயகர் தேர்தல் நடைபெறும். வழக்கமாகச் சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் இருக்காது. ஆளும் தரப்பு நிறுத்தும் வேட்பாளருக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தரும். அதேநேரம் எதிர்க்கட்சி தரப்பிற்குத் துணைச் சபாநாயகர் பதவி வழங்கப்படும். ஆனால், எதிர்க்கட்சி தரப்பிற்குத் துணைச் சபாநாயகர் பதவி வழங்க பாஜக தயாராக இல்லை எனக் கூறப்படுகிறது.

அதேநேரம் லோக்சபா சபாநாயகரைப் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்வதில் மத்திய பாஜக அரசு முயன்று வருகிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களிடம் மூத்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடர்பு கொண்டு பேசியதாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி: இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதாகச் செய்தித்தாள்களில் படித்தேன். இந்தச் சூழலில் தான் அமைச்சர் ராஜ்நாத் சிங் என்டிஏ கூட்டணி சார்பில் மல்லிகார்ஜுன் கார்கேவை அழைத்து சபாநாயகர் தேர்தல் தொடர்பாகப் பேசினார். சபாநாயகர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார்.

ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் பாஜக முன்னிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு தரும் என கார்கே கூறினார்.. ஆனால், துணைச் சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.. இதையடுத்து மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு திரும்பக் கால் செய்வதாக ராஜ்நாத் சிங் கூறினார். இருப்பினும், இப்போது வரை திரும்ப அழைப்பு வரவில்லை.

எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்கிறார்.. ஆனால் நமது தலைவரை அவமானப்படுத்துகிறார்கள். பாஜக சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாகவே இருக்கிறது" என்று அவர் பேசியிருந்தார்.

தேர்தல்: இருப்பினும், பாஜக தரப்பு துணைச் சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்குக் கொடுக்க தயாராக இல்லை. சபாநாயகர் தேர்தலுக்கு பாஜக சார்பில் மீண்டும் ஓம் பிர்லா வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல எதிர்க்கட்சிகள் சார்பில் கேரள மாநில மூத்த காங்கிரஸ் எம்பி கே சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். இரண்டு பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் அங்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்திய வரலாற்றில் சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். நாளை காலை சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் நடைபெறுகிறது. இருப்பினும், பாஜகவுக்குப் பெரும்பான்மைக்குத் தேவையான எம்பிக்கள் இருப்பதால் ஓம் பிர்லா எளிதாக வெல்வார் என்றே தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+