கல்வித்துறைக்கு குட்பை.. தர்மேந்திர பிரதானுக்கு வேறு துறை வழங்க மோடி முடிவு? போட்டுடைத்த ராகுல் காந்தி
டெல்லி: ''தர்மேந்திர பிரதானுக்கு கல்வி துறைக்கு பதில் வேறு துறை வழங்க மோடி கேபினட்டில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இது இந்திய மாணவர்களால் ஏற்கவே முடியாது. தர்மேந்திர பிரதானை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்'' என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''போராடும் மாணவர்களுக்கு மூன்று முக்கிய கோரிக்கைகள் உள்ளன. முதல் கோரிக்கை என்னவென்றால் ஊழல்வாதியும் திறமையின்றி தவறான பாதையில் செல்லும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் நீக்கம் என்பது தான். ஆனால் மோடி கேபினட்டில் தர்மேந்திர பிரதானுக்கு கல்வித்துறைக்கு பதில் வேறு துறை வழங்குவது தான் தீர்வு என்பது போல் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது இந்திய மாணவர்களால் ஏற்க முடியாது. யாராலும் இதனை ஏற்கவே முடியாது. தர்மேந்திர பிரதானை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
தர்மேந்திர பிரதான் ஊழலின் அடையாளமாகவும், எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் நபராகவும் உள்ளார். நம் நாட்டின் விலைமதிக்க முடியாத செல்வங்களாக உள்ள இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் அடையாளமாக தர்மேந்திர பிரதான் இருக்கிறார். எனவே தர்மேந்திர பிரதானுக்கு ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்கு மாற்றுவது என எதுபற்றியும் பேச வேண்டாம். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்'' என்று ஆக்ரோஷமாக கூறினார்.


Click it and Unblock the Notifications
