Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கரண்ட் பில் அதிகமா வருது.." யாத்திரையில் டீ குடிக்க சென்ற ராகுல்.. புலம்பி தள்ளிய ராஜஸ்தான் விவசாயி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராஜஸ்தானில் ராகுல் காந்தி இப்போது பாத யாத்திரை சென்றுள்ள நிலையில், அங்கு விவசாயி ஒருவர் வீட்டில் அவர் டீ குடித்தார். அப்போது அந்த விவசாயி தனது குறைகளை ராகுலிடம் புலம்பித் தள்ளிவிட்டார்.

காங்கிரஸ் கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தலில் சொல்லிக் கொள்ளும் வகையில் வெல்லவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த இமாச்சல பிரதேச தேர்தலைத் தவிர வேறு எதிலும் காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியவில்லை.

மேலும், அங்கு உட்கட்சி குழப்பமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அக்கட்சியில் இருந்து வரிசையாகப் பல தலைவர்கள் விலகினர். இதனால் அக்கட்சி இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டது.

 பாத யாத்திரை

பாத யாத்திரை

இந்தச் சூழலில் தான் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியினருக்கு உற்சாகம் அளிக்கவும் நாடு முழுக்க மக்களை ஒன்று திரட்டும் வகையிலும் மாபெரும் ஒற்றுமை பாத யாத்திரையை நடத்துகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாத யாத்திரை காஷ்மீரில் சென்று முடிவடைகிறது. தேர்தல்களுக்குக் கூட பிரசாரம் செய்யாமல் ராகுல் காந்தி பாத யாத்திரையில் தான் தீவிர கவனம் செலுத்துகிறார். இந்தப் பாத யாத்திரைக்கு நாடு முழுக்க இருக்கும் மக்கள் மிகப் பெரியளவில் ஆதரவு அளித்து வருவதாகக் காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

இதற்கிடையே இப்போது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் இப்போது ஆட்சியில் இருக்கும் ஒரு சில மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. இதனால் மக்களுடன் நெருக்கமாக இந்த பாத யாத்திரையை முக்கியமானதாக ராகுல் காந்தி பார்க்கிறார். அங்கு 7ஆவது நாளாக ராகுல் காந்தி இன்று தனது"பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கினார். பூந்தி என்ற பகுதியில் இன்று யாத்திரையைத் தொடங்கிய சவாய் மாதோபூர் மாவட்டத்தை அடைந்தார்.

 டீ குடிக்க வந்த ராகுல்

டீ குடிக்க வந்த ராகுல்

அப்போது இன்று காலை 8:30 மணியளவில் கிஜூரி கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டில் ராகுல் காந்தி தேநீர் அருந்தினார். அப்போது ராகுல் காந்திக்கு டீ கொடுத்த அந்த விவசாயி, தனது குறைகளைப் புலம்பித் தள்ளிவிட்டார். தங்களுக்கு மின் கட்டணத்திற்கு எந்தவொரு சலுகைகளும் கிடைப்பதில்லை என்று குறிப்பிட்ட அந்த விவசாயி, ஒவ்வொரு முறையும் அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டிய சூழலுக்கு தாங்கள் தள்ளப்படுவதாகவும் ராகுல் காந்தியிடம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 புலம்பித் தள்ளிய விவாயி

புலம்பித் தள்ளிய விவாயி

தனக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த கிராமத்திற்கும் இதே பிரச்சினை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மின்வாரிய அதிகாரிகள் ரீடிங் எடுக்கக் கூடா வருவதில்லை என்றும் அவர்கள் தங்கள் இஷ்டத்திற்குப் பில்லை அனுப்புவதாகவும் அவர் ராகுலிடம் குறிப்பிட்டுள்ளார். மேலும், விவசாயத்திற்கு அடிப்படைத் தேவையான உரத்தை வாங்குவதில் கூட சிரமம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். 270 ரூபாய் மதிப்புள்ள உரத்தைக் கள்ளச் சந்தையில் 600 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியுள்ளதாகவும் புலம்பியுள்ளார்.

 என்ன நடந்தது

என்ன நடந்தது

இதற்கிடையே அந்த விவசாயி வேணிபிரசாத் மீனா, ராகுல் காந்தி தனது வீட்டிற்கு வந்த போது என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களையும் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "ராகுல் காந்தியின் டீமில் இருந்து சிலர் காலை 5 மணிக்கு எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். காலையில் ராகுல் எங்கள் வீட்டில் தான் டீ குடிக்க உள்ளதாகக் கூறினார். அதேபோல ராகுல் காந்தி வந்து டீ குடித்தார். அப்போது பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார். எங்கள் அனைவருடனும் மகிழ்ச்சியாக ஃபோட்டோ எடுத்துக் கொண்டனர். அப்போது தான் நான் எனது புகார்களைச் சொன்னேன்" என்றார்.

குழந்தைகள்

குழந்தைகள்

அந்த விவசாயி வேணிபிரசாத் மீனாவுக்கு 3 பெண்கள் மற்றும் இரு ஆண்கள் உள்ளனர். அவர்களிடமும் பேசிய ராகுல் காந்தி, நன்கு படிக்கும்படி அறிவுரை வழங்கினார். மேலும், அவர்களுக்குக் கொஞ்சம் சாக்லேட்டையும் பரிசாக அளித்தார். அங்கிருந்து கிளம்பும் போது, வெளியே இருந்த இரு விவசாயிகள் ராகுல் காந்தியைப் பார்க்க வேண்டும் எனக் கத்தியபடியே ஓடிச் சென்றனர். அவர்களையும் நிற்க வைத்து ராகுல் காந்தி பார்த்தார். அவர்களிடம் ராகுல் போட்டோ எடுத்துக் கொண்டார்.

 பாத யாத்திரை

பாத யாத்திரை

காங்கிரஸ் இதுவரை இவ்வளவு பெரிய பாத யாத்திரையை நடத்தியதே இல்லை. 150 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த பாத யாத்திரை கன்னியாகுமரியில் ஆரம்பித்தது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா வழியாக இப்போது ராஜஸ்தானை அடைந்துள்ளது. அடுத்து வரும் தேர்தல்களில் வாக்குகளைப் பெற இந்த யாத்திரை பெரியளவில் உதவும் என்று அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+