உ.பி. மாநில விவசாயிகள் மீதான கோர நிகழ்வு.. ஜனாதிபதியிடம் நேரில் முறையிட நேரம் கேட்ட ராகுல்..!
டெல்லி: உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் விவசாயிகள் மீதான கோரத் தாக்குதல் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து முறையிட திட்டமிட்டுள்ளார் ராகுல்காந்தி.
இதற்காக ராகுல்காந்தி தரப்பில் இருந்து ராஷ்ட்ரபதி பவனில் ஜனாதிபதியிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நேரம் கொடுக்கும் பட்சத்தில் ராகுல்காந்தியுடன் மேலும் சில எதிர்க்கட்சித் தலைவர்களும் உடன் செல்வார்கள் எனத் தெரிகிறது.

உயிரிழப்பு
உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் நடந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மத்திய அமைச்சரின் மகன் காரை விட்டு மோதியதில் 4 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது விவசாயிகளை கொந்தளிக்க வைத்ததால் அங்கு பெரும் மோதல் வெடித்தது. அதில் மேற்கொண்டு 4 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்தது.

நேரில் ஆறுதல்
இதையடுத்து மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி விலக்க வேண்டும் என்றும் விவசாயிகளை கார் ஏற்றிக்கொன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கைகள் விடத்தொடங்கினர். சட்டீஸ்கர் மாநில முதல்வர் மற்றும் பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

துணை நிற்கும்
நீதி கிடைக்கும் வரை காங்கிரஸ் நிச்சயம் துணை நிற்கும் என உறுதியளித்த ராகுல், இப்போது இது தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து ஆதரங்களுடன் புகார் தெரிவிக்க உள்ளார். ராகுல்காந்திக்கு இன்னும் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து நேரம் ஒதுக்கித்தரப்படவில்லை. இதனிடையே பிரச்சனைக்கு காரணமாக மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்த சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகார போதை
அதிகார போதையில் மத்திய அமைச்சரின் மகன் போட்ட ஆட்டத்தால் ஒட்டுமொத்த அரசுக்கும் அவப்பெயர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்பதும், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யாரும் சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி தப்பிவிடக் கூடாது என்பதுமே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்து கோரிக்கையாகும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications