மாணவர்கள் மீதான தாக்குதல்.. அமித்ஷாவுக்கு நன்றாகவே தெரியும்.. நேரடியாக சாடிய ராகுல் காந்தி!
டெல்லி: மாணவர்கள் மீதான தாக்குதல் அவர்களை அச்சுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்காகவே நடத்தப்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதேபோல் போராட்ட சாலையில் என்ன நடந்தது என்பது அமித்ஷாவுக்கு நன்றாகவே தெரியும் என்றும் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
நாடு முழுவதும் நீட் தேர்வு விவகாரம் விவாதப் பொருளாக உள்ளது. சிஜேபி நடத்திய போராட்டத்தின் விளைவால் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்தார். நாடாளுமன்றத்தில் நீட் உள்ளிட்ட போட்டி தேர்வு வினாத்தாள்களை லீக் செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்க வழிவகை செய்யும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு விவாதம் நடந்து வருகிறது.

இன்று ராகுல் காந்தி பேசுகையில், மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் காரணம் என்று நேரடியாக குற்றம்சாட்டினார். பெல்லட் குண்டுகளை பயன்படுத்த உத்தரவிட்டதும் அமித்ஷா தான் என்றும் சாடினார். அப்போது ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது. உடனடியாக இங்கு பேச முடியாததை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுவேன் என்று கூறினார்.
அதன்படி ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான எனக்கு கூட பேசுவதற்கு அனுமதி கிடையாது. நான் பேசுவதற்கும், அவையில் அமதியை கொண்டு வரவும் சபாநாயகரை பல முறை கேட்டுக் கொண்டேன். அவர் அதனை செய்யவில்லை. மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு அமித்ஷாவை நான் தொடர்புபடுத்தி பேசியதற்காக இது நடந்தது.
நான் மன்னிப்பு கேட்டால் பேசுவதற்கு அனுமதிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் பாஜக, ஆர்.எஸ்.எஸ். அல்லது அவர்களுடன் தொடர்புடைய வேறு யாரிடமும் நான் ஒரு போதும் மன்னுஇப்பு கேட்க மாட்டேன். போராடிய மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெல்லட் குண்டு தாக்குதலில் காயம் அடைந்த ஒரு இளைஞரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சந்தித்தேன். இதுமட்டுமல்லாமல் ஆணிகள் கொண்ட லத்தியை போலீசார் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மாணவர்கள் மீதான இந்த கொடூரமான தாக்குதலுக்கு, அவர்களை அச்சுறுத்தி மீண்டும் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடாமல் தடுப்பதே அவர்களின் நோக்கம். அதேபோல் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்த போது காவல்துறைக்கு அமித்ஷா தொலைபேசியில் பேசியதை நானே கண்டேன். அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் இருந்து அமித்ஷாவுக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. அதனால் போராட்ட சாலையில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பது அமுத்ஷா தெரியும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
