3 வருஷமா உறங்கிய காங்கிரஸ்..சீண்டிவிட்ட பாஜக..புதுரத்தம் பாய்ச்சின மாதிரி நாடு முழுவதும் போராட்டம்!
டெல்லி: கண்ணுக்கு எட்டிய தொலைவில் காங்கிரஸே இல்லை.. என்ற பாஜகவின் ஏகடியங்களுக்கு பளார், பொளேர் என செயலில் பதிலடி காட்டிக் கொண்டிருக்கிறது அந்த கட்சி. அதாவது காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் புனிதப் பணியை செய்திருக்கிறது பாஜக என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2014, 2019 லோக்சபா தேர்தல்களில் காங்கிரஸ் எதிர்காலம் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியானது. 2019 லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். கடந்த 3 ஆண்டுகளாக அந்த கட்சிக்கான தலைவர் ஒருவர் நியமிக்கப்படவே இல்லை.
அடுத்தடுத்து நடைபெற்ற மாநில சட்டசபை தேர்தல்களில் பரிதாபமான தோல்விகள்தான் கிடைத்தன காங்கிரஸுக்கு. இனி வரும் தேர்தல்களிலும் காங்கிரஸுக்கு இத்தகைய நிலைமைதான் என்பது சில நாட்களுக்கு முன்பு வரையிலான நிலைமை. ஆனால் இப்போது களநிலவரமே தலைகீழாகிக் கொண்டிருக்கிறது.

விசாரணையில் ராகுல்
இந்த பின்னணியில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியை அமலாக்கப் பிரிவு விசாரிக்க அழைத்தது. எதைத் தின்றால் பித்தம் தெளியும்; எதைச் செய்தால் கட்சியை உயிர்ப்பிக்க முடியும் என தவியாய் தவித்த காங்கிரஸ் மேலிடத்துக்கு அமலாக்கப் பிரிவின் சம்மன் ஆகப் பெரும் ஆயுதமாகிப் போனது. ராகுல் காந்தியை விசாரிக்கும் நாளில் பிரமாண்ட சத்யாகிரகப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தது காங்கிரஸ். ராகுல் காந்தியும் விசாரணைக்கு சென்றார். காங்கிரஸும் அறிவித்தபடியே அமர்க்களமான போராட்டத்தை அரங்கேற்றியது.

விசாரணையில் ராகுல்
இந்த பின்னணியில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியை அமலாக்கப் பிரிவு விசாரிக்க அழைத்தது. எதைத் தின்றால் பித்தம் தெளியும்; எதைச் செய்தால் கட்சியை உயிர்ப்பிக்க முடியும் என தவியாய் தவித்த காங்கிரஸ் மேலிடத்துக்கு அமலாக்கப் பிரிவின் சம்மன் ஆகப் பெரும் ஆயுதமாகிப் போனது. ராகுல் காந்தியை விசாரிக்கும் நாளில் பிரமாண்ட சத்யாகிரகப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தது காங்கிரஸ். ராகுல் காந்தியும் விசாரணைக்கு சென்றார். காங்கிரஸும் அறிவித்தபடியே அமர்க்களமான போராட்டத்தை அரங்கேற்றியது.

டெல்லி போலீஸ்
ஆனால் காட்சிகள் இத்துடன் முடியவில்லை. ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். காங்கிரஸும் ஓய்ந்துவிடவில்லை. முன்னைவிட படுஉக்கிரத்துடன் டெல்லி தெருக்களில் களமாடியது. இந்த களத்தின் முன்னணி வரிசையில் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் என பலரும் நின்றனர். மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்துக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரையும் டெல்லி போலீஸ் நடுத்தெருவில் பந்தாடியது.

தொடருமா காங். போராட்டம்
இப்போது ராகுல் காந்தியை மீண்டும் நாளை விசாரணைக்கு அழைத்திருக்கிறது அமலாக்கப்பிரிவு. இந்த ஒருநாள் இடைவெளியில் போராட்டத்துக்கு இடைவேளைவிடாமல் நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிடும் போராட்டத்தை காங்கிரஸ் நடத்தி இருக்கிறது. அதாவது டெல்லியில் மையம் கொண்டிருந்த காங்கிரஸ் போராட்ட புயல் இப்போது ஒவ்வொரு மாநிலமாக தாக்கி வருகிறது. இன்னொரு பக்கம் டெல்லியில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் புகார் மனு கொடுத்திருக்கின்றனர். இந்த விவகாரம் இப்போதைக்கு ஓயப் போவதில்லை. இந்த விவகாரத்தை வீச்சுடன் காங்கிரஸ் முன்னெடுத்தால் அதன் பாய்ச்சலை யாரும் தடுத்துவிட முடியாது என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications